search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி பகுதியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்த
    X
    சிவகாசி பகுதியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்த

    உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - அதிகாரி எச்சரிக்கை

    உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா முத்து கூறினார்.
    சிவகாசி:

    தமிழகம் முழுவதும் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் சுற்றி வருகிறது. இந்த ஆய்வு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள உணவு பொருட்களை கொடுத்து அதில் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் கடந்த 2 நாட்களாக சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வாகனத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மோகன்குமார், ராஜாமுத்து, செல்வராஜ் ஆகியோர் பொதுமக்கள் தரும் உணவு பொருட் களில் கலப்படம் இருந்தால் அதை ஆய்வு மூலம் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்தனர்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா முத்து கூறியதாவது:-

    சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கடந்த 2 நாட்களாக 96 மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது அதில் 54 பொருட்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் குடிக்கும் பாலில் அதிக அளவில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகாசி மணிநகர் பகுதியில் பால் விற்பனை செய்து வந்த ஒரு பால் வியாபாரிடம் மாதிரி எடுத்து அதை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் கேசரி பவுடர், தண்ணீர், சுக்ரோஸ், சீனி ஆகியவை கலந்து இருப்பது தெரியவந்தது. இதே போல் ஓட்டல்களில் வழங்கப்படும் கிரேவி, சால்னா போன்றவற்றிலும் அஜினோ, மோட்டோ, கலர்பொடி, கெட்டுப்போன முந்திரிபருப்பு ஆகியவை கலப்படம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் எண்ணெய், கருப்பட்டி, மசலா பொருட்களிலும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் அடைந்தால் உடனடியாக 94440-42322 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×