search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 231 ஆக உயர்ந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 999 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,497 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    16,198 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 69 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமை படுத்தப்படவில்லை.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,506 ஆக உயர்ந்துள்ளது.

    1,007 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,930 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் மாவட்ட சுகாதாரத் துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாரில்லை.

    மேலும் உள்ளாட்சி அமைப்பினரும் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிட்டு விட்டனர். தொடர்ந்து விதிமுறைகளின்படி மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இம்மாவட்டம் நோய் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக விடுபடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

    ஆனால் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இன்னும் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தொடர்கிறது.

    நேற்றும் மாவட்டத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பிற்கு உயிரிழந்ததால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 231 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று 2-வது நாளாக 153 பேருக்கு கொரோனா தடு்ப்பூசி போடப்பட்டது. கடந்த 2 நாட்களில் 333 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×