என் மலர்
விருதுநகர்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில் முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர் என தமிழகம் முழுவதும் பலரிடம் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேலைக்காக பணம் பெற்றதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுவரை கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி, அவரது மனைவி மாலதி, வேல்முருகன் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தற்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கூடுதலாக ரூ.73 லட்சம் மோசடி புகார் வந்திருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் கொடுத்தவர்களிடம் முதல் கட்டமாக போலீசார் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். எந்த பணிக்காக யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என விசாரித்து வருகின்றனர். இதற்காக புகார் கொடுத்தவர்களுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் துணையுடன் அவர் அங்கு இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள மீசலூரை சேர்ந்தவர் கல்யாண வள்ளி தாயார் (வயது 73). இவர் சூலக்கரை செல்வதற்காக விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.
சூலக்கரை மின்வாரிய காலனியில் இறங்கியவுடன் தன் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது பையில் இருந்த 22 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். ஆனால் அதற்குள் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டார்.
அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் பலர் மோசடி புகார்களை அளித்து வருகின்றனர். அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அவர் மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகாசி சித்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த தூயமணி மனைவி குணா, தனது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கி தரவேண்டி அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோர் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.17 லட்சம் கொடுத்ததாக புகார் வந்துள்ளது.
மேலும் மதுரை வில்லாபும் காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், மாநகராட்சி அலுவலக உதவியாளர் பணிக்காக சிவகாசி ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் கணேசன் மற்றும் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜோசப்ராஜ், தனது நண்பர் தரணிதரனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைக்காக முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்ல தம்பி என்ற விஜயநல்லதம்பி மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை எதுவும் வாங்கி தரவில்லை என 3 பேரும் இணைய தளம் மூலமாக புகார் அளித்துள்ளனர்.
இதேபோல் மதுரை கோமதிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் தனது மகன் ஆதித்யனுக்கு ஆவினில் கிளை மேலாளர் வேலைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மானகசேரியை சேர்ந்த பரமகுரு, கரூர் தாந்தோனி மலை முத்துச்சாமி, திருச்சி பிரின்ஸ் சிவக்குமார் ஆகியோர் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.16 லட்சம் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடாசலம் தனது மகன் டாக்டர் பாலவிக்னேசுக்கு மருத்துவத்துறையில் பணி மாறுதல் பெற்று தருவதாக விஜயநல்லதம்பி மூலமாக ராஜேந்திர பாலாஜிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக மற்றொரு புகார் வந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காள வாசல் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் 6-ம் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு கழிவுகளை குப்பை தொட்டியில் போட சாலைக்கு சென்றார். அப்போது அங்கு 2 பேர் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் சிறுமியை அழைத்தனர். எதற்கு அழைக்கின்றனர்? என சிறுமி அங்கு சென்றார். அப்போது 2 பேரும் சிறுமியை வாயை பொத்தி கடத்தி சென்றனர். அவர்கள் மறைவான பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்து யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
ஆனால் 2 நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தந்தை இதுபற்றி கேட்டபோது, அவரிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மேலும் விசாரித்த போது பார்த்தால் அடையாளம் காட்டிக்காட்டுவேன் என சிறுமி தெரிவித்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் சிறுமியை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரும் இருந்துள்ளனர். அவர்களை சிறுமி அடையாளம் காண்பித்தார். இதனை தொடர்ந்து 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தொம்பக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் (47), வெங்கடேஷ்பாபு (40) என தெரியவந்தது.
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சூலக்கரை மார்டன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.
இவரது மனைவி பானுமதி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சஜேஷ் நாராயணன் என்ற மகனும், தன்யா என்ற மகளும் உள்ளனர்.
மகன் சென்னையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மகள் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன், திடீரென தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் பின்புறம் சென்றார்.
அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்தவழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் ராதாகிருஷ்ணன் திடீரென பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுநர் விருதுநகர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விரைந்தனர். அவர்கள் தண்டவாள பகுதியில் பிணமாக கிடந்த ராதாகிருஷ்ணன் உடலை மீட்டனர்.
முதலில் ராதாகிருஷ்ணன் அடையாளம் காணப்படவில்லை. அப்போது அவர் பிணமாக கிடந்த இடத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அதில் செல்போனும் இருந்தது. அதனை எடுத்து போலீசார் விசாரித்தபோதே தற்கொலை செய்தது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.
ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை அல்லது பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று அவரது குடும்பத்தினரிட மும், உடன் பணிபுரிபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதன் காரணமாக அவர் தற்கொலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து அவதிப்பட்டுள்ளார். இதனால் அதற்கு சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். இதன் காரணமாக வேதனையடைந்து தற்கொலை செய்தாரா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா தேவி (வயது 23), கரோலின் எஸ்தர்(23).
இருவரும் சாத்தூரில் உள்ள கூட்டுறவு தொழில் கல்லூரியில் பயின்று வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி முடிந்து இருவரும் மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சிவகாசி சாலையில் மேட்டமலை அருகே சென்றபோது அந்த வழியாக பஸ் மாணவிகள் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
இதில் சந்திராதேவி, கரோலினா எஸ்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனால் சந்திராதேவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கரோலின் எஸ்தரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி பஸ் ஓட்டிய ஓட்டுநர் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி தராமலும் ரூ. 3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது நவம்பர் 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தேடினர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் நேற்று “லுக்-அவுட்” நோட்டீசு வழங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் மனு அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், அரசு பள்ளி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் திருச்சியில் பள்ளி நடத்தி வரும் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி பெயரில் 6 வங்கி கணக்குகள் உள்ளன என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண் அக்ரகாரம் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரது தாயார் மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மகளிடம் விசாரித்த போது, தான் வேலை பார்க்கும் கடைக்கு எதிரே உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போத்தநதியைச் சேர்ந்த அழகுராஜா (19) என்பவர் காதலித்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் தாயார் விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அழகுராஜாவை கைது செய்தனர்.
விருதுநகர் தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (23). இவரும் அதே பகுதி கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அப்போது பாண்டியம்மாளிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக போலீசார் முன்னிலையில் உறுதியளித்தார்.
இந்த நிலையில் அவர் திடீரென பாண்டியம்மாளை திருமணம் செய்ய மறுத்த தோடு, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை தேடி வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி தராமலும் ரூ. 3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராஜ், முத்துப்பாண்டி ஆகியோர் மீது கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் தேடினர்.
ஆனால் ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் நேற்று “லுக்-அவுட்” நோட்டீசு வழங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதிலும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
தற்போது ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், அரசு பள்ளி ஒன்றில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மூலம் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் தனது நண்பர்களான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பரமகுரு, முத்துசாமி ஆகியோரின் மூலமாக திருச்சியில் பள்ளி நடத்தி வரும் ஒருவரிடம் ரூ.27 லட்சம் பேசி, ரூ. 11 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குருராஜ். இவரது மனைவி சித்ராதேவி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சித்ராதேவி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அப்போது வின்சென்ட் என்பவர் குடும்ப நண்பராக சித்ராதேவியிடம் பழகியுள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம் வரை பணத்தை பறித்துள்ளார்.
தற்போது அவர் திருமணத்திற்கு மறுத்தததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் சித்ராதேவி புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வின்சென்ட் கைது செய்யப்பட்டார்.






