என் மலர்
விருதுநகர்
விருதுநகரில் குழந்தைகளின் ஆபாச படத்தை தனது செல்போனில் வெளியிட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோ குற்றங்களை தடுக்கும் வகையில் வன்கொடுமை பாலியல் தடுப்புபிரிவு போலீசார் செல்போன் மற்றும் இணையங்களை கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் சாலைத்தெருவைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் தனது மொபைலில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வன்கொடுமை பாலியல் தடுப்புபிரிவு அலுவலகத்தில் இருந்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் தரப்பட்டது.
அதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சப்இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் விசாரணை நடத்தி மாயக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி வழியாக விருதுநகருக்கு சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
விருதுநகர்
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து விருதுநகர் சரக்கு ரெயில்கள் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரெயில் நிலையங்கள் வழியாகவே இயக்கப்பட்டு வந்தன.
காரைக்குடி, மானா மதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த வழியாக சரக்கு ரெயில் இயக்கப்படவில்லை. அந்த வழித் தடத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூரில் இருந்து விருதுநகருக்கு 21 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் முதன் முறையாக திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரெயில் தற்போதுதான் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வழித்தடத்தில் இருந்து 31 கி.மீ. குறைவான தூரத்தில் சரக்கு ரெயில் வந்துள்ளது.
இந்த ரெயிலில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தானியங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்காக திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு நுகர் பொருள் வாணிபக்கழகம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டா சிறப்பு முகாம் 3 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று சிவகாசி வட்டம் கிருஷ்ணபேரி கிராமத்தில் முகாம் நடைபெற்றது. மார்ச் 2ந்தேதி அனுப்பன்குளம், அருப்புக்கோட்டை, வேலாயுதபுரம், கே.புதூர், கூவர்குளம், பரையனகுத்தி, தேனூர், ஊத்தாகுளம், கோவிலாங்குளம், குண்டுகுளம், சிந்தப்பள்ளி, அப்பனேரி, கடம்பன்குளம், ஏழாயிரம்பண்ணை கிராமங்களில் முகாம் நடக்கிறது.
4ந்தேதி குலசேகர நல்லூர், வி.சுந்தரலிங்கபுரம், அயன்ரெட்டியபட்டி, பிள்ளையார்நத்தம், போத்தி ரெட்டிபட்டி, அரசியார்பட்டி, ரெகுநாதபுரம், ஓ.முத்துச்சாமிபுரம் கிராமங்களில் முகாம் நடக்கிறது.
அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2014 முதல் 2019 வரையிலான வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்காதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
2014ம் ஆண்டு முதல் 2019வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத்தவறிய பதிவு தாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட பதிவுதாரர்கள் மார்ச் 1ந்தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் சம்மந்தப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் வாயிலாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tnvelaivaaippu.gov.in/என்ற இணைய தள முகவரியை பயன்படுத்தி மார்ச் 1ந்தேதிக்குள் பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது விருதுநகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஆஜராகி இன்ஸ்டா கிராமில் உள்ள தனது புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 33) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும் போது, பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்.
சைபர் கிரைம் பற்றிய புகார்களை www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் பதிவிடலாம். மேலும் சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு 1930, 155260 என்ற எண்களில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்றார்.
கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்குள்ள என்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்குவதற்கு முன்பாக கடந்த 18-ந்தேதி இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது.
அதன்பேரில் விஷ்வா உள்ளிட்ட சில மாணவர்கள் வந்துள்ளனர். மாணவர் விஸ்வாவுடன் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 9 பேரில் 6பேர் புறப்பட்டு வந்தனர்.கடந்த 18-ந்தேதி ஏர் அரேபியா விமானம் மூலம் சார்ஜா வந்து, பின்னர் அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னை வந்திருக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர் விஸ்வா கூறியதாவது:-
பொதுவாக இந்தியாவிற்கு வந்து திரும்ப விமான கட்டணம் 42 ஆயிரம் ரூபாய். ஆனால் போர் மேகம் சூழ்ந்து இருந்ததால் உக்ரைனில் இருந்து இங்கு வர விமானத்தில் வருவதற்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்கள். நாங்கள் என்னுடன் படிக்கும் வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் கூடுதல் பணம் கொடுத்து இங்கே வந்து விட்டோம்.
நல்லவேளையாக நான் அங்கு வந்து சேர்ந்து விட்டேன். என்னுடன் படித்த மாணவர்கள் அங்கு பலர் இருக்கிறார்கள். எங்கள் கல்லூரியில் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர்.ரஷ்யா கீவ்வில் தாக்குதல் நடத்துவதால் எங்கள் கல்லூரியும் அங்கு இருப்பதால் எனக்கு மிகுந்த அச்சமாகவும் எங்கள் மாணவர்களின் நினைத்து கவலையாக உள்ளது.
மேலும் எங்கள் கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்குள்ள என்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் சாலைகளில் பீரங்கிகளுடன் வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன என்றும் அவர்கள் கூறினர். இதனால் பதற்றத்துடன் உள்ள இந்திய மாணவர்களை இங்கு அழைத்து வரஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர் விஸ்வா தெரிவித்தார்.
பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர், போர்மேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
நேற்று இங்கு நடந்த வெடி விபத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த கீழபெத்துலுபட்டியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி அமிர்தம் கொடுத்த புகாரின்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரவீந்திரன், போர்மேன் அய்யனார் ஆகியோர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகரில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால் அந்த தொழிலை நம்பி உள்ள ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக பிஜிலி (சீனி வெடி), சரவெடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவகாசி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிஜிலி, சரவெடிகளை வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:
வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த குருசாமி (40) என்பவர் ஆயிரம்வாலா சரவெடிகள் கொண்ட 30 அட்டைபெட்டிகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
இதேபோல் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கருப்பசாமி, கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த சின்னமாரியப்பன் ஆகியோர் தலா 8 கிலோ சரவெடிகளை வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.
கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த கொடியரசன் என்பவர் 240 பிஜிலி வெடி பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறி அவரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோத புகையிலை பொருட்களை தடுக்க போலீ சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீசார் சம்பவத்தன்று ஜவாஸ்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் 2பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து நடத்திய கிடுக்கப்பிடி விசாரணையில் அவர்கள் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராமர்(44), பாண்டிய ராஜன்(38) என்பதும், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள 174புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது-
இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மாயமாகினர்.
விருதுநகர்
விருதுநகர் ஆயம்மாள்நகரை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் வீரலட்சுமி(19). இவர் விருதுநகரில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற வீரலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகள் கவுசிகமா(19). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு சென்ற கவுசிகமா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகளில் போட்டியிட்ட 554 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ந்தேதி தேர்தல் நடந்தது.
முதன் முதலாக தேர்தலை சந்தித்த சிவகாசி மாநகராட்சியில் 68.47 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 நகராட்சிகளிலும் 67.12 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகளை தி.மு.க. கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வார்டில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே, தேர்தலில் போட்டியிட அவர்கள் கட்டிய டெபாசிட் தொகையை திரும்பபெற முடியும்.
அதற்கு குறைவாக வாக்குகள் பெற்றால் டெபாசிட்தொகை திரும்ப கிடைக்காது. சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட்ட 268 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் உள்பட 161 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
அதேபோல் அருப்புக் கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்ட 150 பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேர் உள்பட 81பேர் டெபாசிட்டை இழந்தனர். ராஜபாளையம் நகராட்சி யில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிட்ட 196பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 11பேர் உள்பட 112பேர் டெபாசிட் இழந்தனர்.
சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிட்ட 94பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8பேர் உள்பட 42பேர் டெபாசிட் இழந்தனர். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 15பேர் உள்பட 86 பேரும், ஸ்ரீவில்லிபுத்துர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிட்ட 142பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7பேர் உள்பட 72பேர் டெபாசிட் இழந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சிகளில் மொத்தம் 554பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். டெபாசிட்டை இழந்தவர்களில் பா.ஜனதா, நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகளும் அடங்குவர்.
வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 12-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா தாமோதரகண்ணன் 487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து வாக்காளர்களின் வீட்டுற்கு நேரடியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அவரது திருமண மண்டபத்திற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு கறி விருந்து பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 12-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா தாமோதரகண்ணன் 487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து வாக்காளர்களின் வீட்டுற்கு நேரடியாக சென்று நன்றி தெரிவித்தார். அப்போது அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அவரது திருமண மண்டபத்திற்கு அழைத்துள்ளார். அங்கு அவர்களுக்கு கறி விருந்து பரிமாறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.






