என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார்(25), மில் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அம்மாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (29). 5 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கருப்பசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் 

    மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தைச் சேர்ந்தவர் சித்ராதேவி(வயது26). இவர் தளவாய்புரம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் மாரீஸ்வரன் திருமணம் செய்து கொள் வதாக ஆசை வார்த்தை கூறி மதுரை, சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் தற்போது மாரீஸ்வரன் தான் வேறு சமுதாயம் என்று கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார்.

    மேலும் அவரது உறவினர்கள் என் குடும்பத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இந்த புகாரின் அடிப் படையில் தளவாய்புரம் போலீசார் விசாரணை நடத்தி மாரீஸ்வரன் அவரது பெற்றோர் பரமசிவம்-ஜெயமாதா, சகோதரர் மணிகண்டன் உறவினர் காஞ்சி உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி மாநகராட்சி மேயராக சங்கீதா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    விருதுநகர்

    சிவகாசி மாநகராட்சி அந்தஸ்துக்கு தரம் உயர்ந்த பிறகு முதன்முதலாக தற்போதுதான் தேர்தலை சந்தித்தது. இந்த மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில்  24 வார்டுகளில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 11 வார்டுகளிலும், வெற்றி பெற்றது. மேலும் 4 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றனர். 

    வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். அதற்கு முன்னதாகவே அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9பேர் திமுகவில் இணைந்தனர். அவர்கள் மட்டுமின்றி சுயேட்சையாக வெற்றி பெற்ற 4பேரும் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர். 

    இதனால் சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 45 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 34-வது வார்டில் வெற்றிபெற்ற தி.மு.க.வின் சங்கீதா நேற்று அறிவிக்கப்பட்டார். 

    மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடந்தது. தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சங்கீதா போட்டியின்றி மேயராக தேர்வானார். 

    இதையடுத்து சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் ஆக சங்கீதா பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சியின் ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

    சிவகாசி மாநக ராட்சியின் முதல் மேயர் ஆக பொறுப்பேற்றுக்கொண்ட சங்கீதாவுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    வேலை கேட்டு விண்ணப்பம் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    பாலையம்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு உள்ளது. இதன் மேலாளராக சீனிவாசன் (வயது 50) என்பவர் உள்ளார். தற்போது கிட்டங்கி அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

    அதன்படி சம்பவத்தன்று அருப்புகோட்டையை சேர்ந்த 22 வயதான திருமணமான இளம்பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய வந்தார். அவர் மேலாளர் சீனிவாசனிடம் தனது விண்ணப்பத்தை கொடுத்தார். அப்போது அவர் அந்த பெண்ணை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    வேலை தொடர்பான விவரத்தை கேட்பதற்காகவே தன்னை அழைப்பதாக நினைத்து இளம்பெண், மேலாளரின் அறைக்கு சென்றார். அப்போது சீனிவாசன் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் மேலாளரை தள்ளி விட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    மேலாளர் சீனிவாசன் இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் உனது விண்ணப்பத்தை நிராகரித்து விடுவேன் என கூறியதாக தெரிகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இளம்பெண் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

    தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார்

    இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அருப்புகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளர் சீனிவாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் சங்கர பாண்டியபுரம் புதுத் தெருவை சேர்ந்தவர்  ராஜேந்திரகுமார்(வயது34). இவரது மனைவி ஆண்டாள் பிரியதர்ஷினி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    ராஜேந்திரகுமார் அதே பகுதியில் உள்ள விசைத்தறிகூடத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டாள் பிரியதர்ஷினி மகனுடன் தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதனால் தனிமையில் இருந்த ராஜேந்திரகுமார் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை சமரசம் பேசி அழைத் துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரி கிறது.

    இதனால் விரக்தி அடைந்த ராஜேந்திரகுமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

     இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிவகாசி அருகே கல்லூரி மாணவி காதலனுடன் மாயமானார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கட்டளைப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் காளீஸ்வரி(வயது 20). இவர் தனியார் பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். 

    பொன்ராஜின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டதால் மதுரை மாவட்டம் கொட்டாணிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். 

    அவரை பார்ப்பதற்காக காளீஸ்வரி அடிக்கடி மதுரை சென்று வந்தார்.அப்போது அந்த ஊரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் பொன்ராஜ் கண்டித்தார். இந்தநிலையில் காளீஸ்வரி திடீரென மாயமாகி விட்டார். 

    இதுகுறித்து மாரனேரி போலீசில் பொன்ராஜ் புகார் செய்தார். அதில், காளீஸ்வரி பாண்டியராஜனுடன் சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். காதலனுடன் கல்லூரி மாணவி சென்ற சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பழைய விதிகள்படி மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர்


    மத்திய அரசின் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில்  பல இடங்களில்  நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, விருதுநகரிலும் இந்த பள்ளிகள் உள்ளன. 

    இந்த பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள் முதலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதன்பிறகு மற்ற குழந்தைகளும் சேர்க்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 31ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பள்ளிகளில்  முதல் வகுப்பில் சேர 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்  என்பது விதியாக இருந்தது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த விதிகள்தான் கடைபிடிக்கப்படுகிறது-.

    இந்த நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு 6 வயது முதல் 8 வரையிலான குழந்தைகளை 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழக குழந்தைகளை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் 6 வயது முதல் 8 வரையிலான குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதாகவும், அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதி வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் 1ம் வகுப்புக்கான வயது வரம்பு    5 என்று இருக்கும் நிலையில் மத்திய அரசின் புதிய விதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கைக்கு தடையாக உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய விதியை கைவிட்டு பழைய விதிப்படி தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தென்மாவட்ட எம்.பி.க்கள் மத்திய அரசிடமும், மத்திய கல்வி துறையிடமும் வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகாசி மாநகராட்சியில் நேற்று பதவியேற்றுக் கொண்ட 45 கவுன்சிலர்களும் மாநகராட்சி அரங்கை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சொகுசு பஸ்சில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
    சிவகாசி:

    சிவகாசி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 24 வார்டுகளிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 வார்டுகளிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    இங்கு சுயேட்சையாக நின்ற மகேஸ்வரி, தங்கபாண்டிச்செல்வி ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 9 பேர் தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.

    நேற்று பதவியேற்பு விழாவின்போது மற்றொரு சுயேட்சை வேட்பாளர் சாமுவேலும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலராக மாறினார். இதனால் 45 உறுப்பினர்கள் பலத்துடன் சிவகாசி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

    நேற்று பதவியேற்றுக் கொண்ட 45 கவுன்சிலர்களும் மாநகராட்சி அரங்கை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சொகுசு பஸ்சில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். நாளை (4-ந் தேதி) மேயர், துணை மேயர் தேர்வுக்காக அவர்கள் மீண்டும் சிவகாசி அழைத்து வரப்படுகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10, அ.ம.மு.க. 5, தி.மு.க. 5, காங்கிரஸ் 6, சுயேட்சை 1 இடங்களை பிடித்துள்ளன. அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சொகுசு பஸ்சில் நகராட்சி அலுவலகம் வந்தனர். அனைவரும் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் மீண்டும் அதே பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர்.

    மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 6 வார்டுகளில் தி.மு.க.வும், 1 வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மிரட்டப்படுவதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஒரு உறுப்பினருக்கு 2 போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

    இந்த பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என்ற நிலையில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவியேற்றுக் கொண்டனர்.

    8-வது வார்டில் வெற்றி பெற்ற மாரியம்மாள் வந்தபோது அவரது 13 வயது மகன் ரோ‌ஷன் ஒரு வாரத்திற்கு பிறகு தாயை கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்தான். அவனுக்கு ஆறுதல் கூறிய மாரியம்மாள் இன்னும் சில நாட்களில் வீட்டிற்கு வந்து விடுவேன் என கூறிவிட்டு மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் காரில் புறப்பட்டார்.
    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்தமாதம் 19ந்தேதி நடைபெற்றது. 

    சிவகாசி மாநகராட்சியான பிறகு முதன்முதலாக தேர்தல் நடந்தது. இங்குள்ள 48 வார்டுகள், 4 நகராட்சிகளில் உள்ள மொத்தம் 171வார்டுகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 143 வார்டுகள் என மொத்தம் 362 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது-. 

    சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர்கள், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்கள்,  ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்கள், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்கள், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் என 5 நகராட்சிகளிலும் 171 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

    அதேபோன்று பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15 உறுப்பினர்கள், சேத்தூரில் 18 உறுப்பினர்கள், காரியாபட்டியில் 15 உறுப்பினர்கள், மம்சாபுரத்தில் 18 உறுப்பினர்கள், மல்லாங்கிணறில் 15 உறுப்பினர்கள், சுந்தரபாண்டியத்தில் 15 உறுப்பினர்கள், எஸ்.கொடிக்குளத்தில் 15 உறுப்பினர்கள், வ.புதுப்பட்டியில் 15 உறுப்பினர்கள், வத்திராயிருப்பில் 17 உறுப்பினர்கள் என 9 பேரூராட்சிகளில் 143 பேர் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
     
    தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி அலுவலகங்களில் இன்று நடந்தது. சிவகாசி மாநகராட்சி, 5நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 362 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர். 

    மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வார்டு கவுன்சிலர்களுக்கு ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்துவைத்தனர். பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கு செயல்அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.  

    கவுன்சிலர்கள் பதவி யேற்பு விழாவை முன்னிட்டு சிவகாசி மாநகராட்சி, அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதியில்லாததால், அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
    சாத்தூர் பண்ணையில் வருகிற 15ந்தேதி ஆடுகள் ஏலம் நடக்கிறது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு,  கழிவு செய்யப்பட்ட 41 கன்னி வெள்ளாடுகள்,  19 வெம்பூர் செம்மறி ஆடுகள் ஆகமொத்தம் 60 ஆடுகள் வருகிற 15ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12  மணியளவில் பொதுஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இதற்கான ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்தொகையாக ரூ.5 ஆயிரத்துக்கான வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிமூலம் பெற்று, வருகிற 14ந்தேதி மதியத்திற்குள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணைஇயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.  

    வங்கி வரைவோலையானது துணைஇயக்குநர், ஆட்டுப்பண்ணை, சாத்தூர் (ஞிமீஜீutஹ் ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ, கிபி, ஷிலீமீமீஜீ யீணீக்ஷீனீ, ஷிணீttuக்ஷீ) என்ற முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும்.  முன்தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.

    இதுதொடர்பான விவரங்கள் தேவைப்படுவோர் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 89407 98444 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம். ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விபரங்கள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. 

    இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர் அருகே நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்

    விருதுநகர் வெல்லுரை சேர்ந்தவர் தங்கேஸ்வரன்(வயது 24). இவர் சிவகாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுடன் தங் கேஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆமத்தூர் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த 24ந்தேதி தங்கேஸ்வரன் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர்பிழைத்தார். அதன்பிறகு மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார். விருதுநகர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரி தோட்டத்தில் தங்கேஸ்வரன் தூக்கில் தொங்கினார். 

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தங்கேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் சோதனை நடத்தி வெடிபொருட்கள் பறிமுதல் செய்து கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி புஷ்பம். இவர்கள் வீட்டில் பட்டாசு தொழில் செய்து வந்தனர். 

    இந்தநிலையில் உரிமம்பெறாத வெடிபொருட்கள் அங்கு இருப்பதாக சங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் சோதனை நடத்தி ரூ.60ஆயிரம் மதிப்பிலான வெடிபொருட்களை பறிமுதல் செய்து கணவன் மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர். 

    இதேபோல் வெம்பக்கோட்டை போலீசார் சோதனையில் கோட்டையூரை சோர்ந்த கண்ணன், செல்வமோகன் ஆகியோர் தலா 5 கிலோ வெடிபொருட்கள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டனர். குமார் என்பவரிடம் இருந்து 7கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரும் கைது செய்யப்பட்டார். 
    ×