என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கன்னியாகுமரி
சிவகாசி மாநகராட்சியில் பதவியேற்ற கவுன்சிலர்கள் சொகுசு பஸ்சில் கன்னியாகுமரி சென்றனர்
சிவகாசி மாநகராட்சியில் நேற்று பதவியேற்றுக் கொண்ட 45 கவுன்சிலர்களும் மாநகராட்சி அரங்கை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சொகுசு பஸ்சில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவகாசி:
சிவகாசி மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 24 வார்டுகளிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 வார்டுகளிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு சுயேட்சையாக நின்ற மகேஸ்வரி, தங்கபாண்டிச்செல்வி ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 9 பேர் தி.மு.க.வில் இணைந்து விட்டனர்.
நேற்று பதவியேற்பு விழாவின்போது மற்றொரு சுயேட்சை வேட்பாளர் சாமுவேலும் தி.மு.க. ஆதரவு கவுன்சிலராக மாறினார். இதனால் 45 உறுப்பினர்கள் பலத்துடன் சிவகாசி மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
நேற்று பதவியேற்றுக் கொண்ட 45 கவுன்சிலர்களும் மாநகராட்சி அரங்கை விட்டு வெளியே வந்ததும் குடும்பத்துடன் சொகுசு பஸ்சில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். நாளை (4-ந் தேதி) மேயர், துணை மேயர் தேர்வுக்காக அவர்கள் மீண்டும் சிவகாசி அழைத்து வரப்படுகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் அ.தி.மு.க. 10, அ.ம.மு.க. 5, தி.மு.க. 5, காங்கிரஸ் 6, சுயேட்சை 1 இடங்களை பிடித்துள்ளன. அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலர்கள் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சொகுசு பஸ்சில் நகராட்சி அலுவலகம் வந்தனர். அனைவரும் பதவியேற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் மீண்டும் அதே பஸ்சில் புறப்பட்டுச் சென்றனர்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 6 வார்டுகளில் தி.மு.க.வும், 1 வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மிரட்டப்படுவதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஒரு உறுப்பினருக்கு 2 போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒருவர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்த பேரூராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றும் என்ற நிலையில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவியேற்றுக் கொண்டனர்.
8-வது வார்டில் வெற்றி பெற்ற மாரியம்மாள் வந்தபோது அவரது 13 வயது மகன் ரோஷன் ஒரு வாரத்திற்கு பிறகு தாயை கண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க கட்டிப்பிடித்தான். அவனுக்கு ஆறுதல் கூறிய மாரியம்மாள் இன்னும் சில நாட்களில் வீட்டிற்கு வந்து விடுவேன் என கூறிவிட்டு மற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களுடன் காரில் புறப்பட்டார்.

Next Story