என் மலர்
விருதுநகர்
மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் 4 பேருக்கு ஜாமீன் வழங்கி இளைஞர் நீதிமன்ற குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டார்.
விருதுநகர்:
விருதுநகரில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலிலும், பள்ளி மாணவர்கள் 4 பேர் சிறுவர்கள் என்பதால் மதுரையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களை பாலியல் வன்கொடுமை நடந்த மருந்து குடோன் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் அழைத்து சென்றும் விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 4 பேரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் காவல் முடிந்து கடந்த 4-ந் தேதி ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் அங்கு வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஹரிகரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் ஆகிய 8 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்காக அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு 5 மணி நேரம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர் மதுரை மத்திய ஜெயிலுக்கும், பள்ளி மாணவர்கள் 4 பேர் மதுரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று விருதுநகர் சிறார் நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பு வக்கீல் மனுதாக்கல் செய்தார். அதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் சிறுவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி இளைஞர் நீதிமன்ற குழும நீதிபதி மருதுபாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து சிறுவர்கள் 4 பேரும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இன்று விடுவிக்கப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்...நீட் தேர்வு எழுத கூடுதலாக 20 நிமிடங்கள்- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
சாத்தூர் அருகே பெண் மர்மமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வி.மீனாட்சிபுரத்தை சேர்ந் தவர் வேலம்மாள் (வயது 55). இவர் தனது உறவினர் முருகன் என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில் வேலம்மாள் வீட்டின் திண்ணையில் இறந்து கிடப்பதாக முருகனுக்கு தகவல் வந்தது.
இயற்கை மரணம் என கருதிய முருகன் உடனே வீட்டுக்கு சென்று வேலம்மாள் இறுதி சடங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் இறந்துகிடந்த வேலம்மாளின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது. இது முருகனுக்கு சந்கேத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சாத்தூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதில் வேலம்மாள் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 30 பவுன் நகைகள் மாயமானது.
விருதுநகர்
சாத்தூர் காமாட்சி தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 42). இவர் குடும்பத்தினருடன் உறவினர் இல்லத்திருமணத் துக்கு சென்று திரும்பினார்.
அதன்பிறகு அவரது மனைவி தனது 30பவுன் நகைகளை பீரோவில் வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த நகைகள் திடீரென மாயமாகிவிட்டன.
இதுகுறித்து சாத்தூர் டவுன்போலீசில் விக்னேஸ்வரன் புகார் செய்தார். அதில், வீட்டை சுத்தப் படுத்து வதற்காக கார்த்தி என்ற பெண்ணையும், ஜோதி என்பவரையும் அழைத்து வந்ததாகவும், இவர்கள் தான் நகையை திருடியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு காமிரா பதிவை ஆய்வு செய்தபோது காலையில் வேலைக்கு வந்தஜோதி வெறும் கையுடன் வருவதும், திரும்பிச் செல்லும் போது ஒரு பையை கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்காட்டை பாலையம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (53). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த 30 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே இந்திய கம்யூனிஸ்டு தாலுகா மாநாடு நடந்தது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2வது தாலுகா மாநாடு நடைபெற்றது.இதில் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் இந்த மாநாட்டில் வத்திராயிருப்பு தாலுகாவில் கருவூலம் அமைக்க வேண்டும். போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க வேண்டும். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
வத்திராயிருப்பு அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். வருசநாடு மலை பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வத்திராயிருப்பில் இருந்து அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு சுற்று வட்டார பஸ் வசதி செயல் படுத்த வேண்டும். கண்மாய் மீன் பாசத்தை 5 வருடங்களுக்கு ஒரு முறை என்பதை ரத்து செய்துவிட்டு வருடத்திற்கு ஒருமுறை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் நெல்கொள்முதல் நிலையங்களை விரிவுபடுத்தவும்,விவசாயிகளுக்கு நெல் களம் அமைத்துத் தரவேண்டும்.
வத்திராயிருப்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்துக்கொடுக்க வேண்டும்.சுந்தரபாண்டியத்தில் இருந்து செல்லும்போது நுழைவாயில் பகுதியில் உள்ள பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரிசாமி, லிங்கம், தாலுகா செயலாளர் கோவிந்தன், துணைச்செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.
கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய&மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவ&மாணவிகளின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு சீரியமுறையில் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சரால் 20.3.2022 அன்று முதல் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங் கப்பட்டுள்ளது. அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சி களை தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் இதன் மறு ஒளிபரப்பு மாலை 7 மணியில் இருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதனை போட்டித்தேர்விற்கு படிக்கும் அனைத்து மாணவ&மாணவிகளும் பயன்படுத்தி பயனடையலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
தீப்பெட்டி உற்பத்தி தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாத்தூர்:
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் காரணமாகவும் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு, சல்பர் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் 50 சதவீதம் முதல் 140 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாலும், தீப்பெட்டி தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மேலும் தீப்பெட்டி பண்டல்களுக்கு முறையான விலை கிடைக்காததால் அதிக அளவிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்து இயங்கும் சிறு தொழிற்சாலைகள் அனைத்தும் தொழில் பாதிப்பு காரணமாக இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
வருகிற 17-ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக இதனை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இழந்துள்ளனர்.
ஏற்கனவே சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை இன்றி விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில் பிரதானமாக எந்த தொழிலும் இல்லாத சூழ்நிலையில் தீப்பெட்டி தொழிலை மட்டுமே நம்பி இருந்த சாத்தூர் பகுதி மக்களுக்கு இந்த வேலைநிறுத்த போராட்டம் பேரிடியாக அமைந்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
சாத்தூர் வெங்கடாசல புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஹரிசங்கர்(வயது 26). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து பேசுவதாகவும், இங்கு மெக்கானிக்கல் சூப்பர் வைசர் வேலை தயாராக இருப்பதாகவும், நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் வேலையில் சேர்ந்து விடலாம் என தெரிவித்தார்.
மேலும் ஹரி சங்கரிடம் கவுதம், மித்ரா, மல்கோத்ரா, ஷகில் உள்பட 7 பேர் தொடர்ந்து வேலை குறித்து பேசியுள்ளனர். இதனை நம்பிய ஹரிசங்கர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 98ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.
இந்தநிலையில் அவர்கள் மேலும் பணத்தை வங்கிகணக்கில் செலுத்துமாறு கூறி வந்துள்ளனர். இதனால் ஹரிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் தனது பணத்தை திருப்பிதருமாறு கேட்டுள்ளார். அதன்பின் அவர்கள் செல்போன் அனைத்தும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதன்பின்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் பணமோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கருப்பையா (47). இவரது கடையில் திருச்சுழி சேதுராயனேந்தலை சேர்ந்த வல்லரசு, லட்சுமணன் ஆகியோர் மது வாங்க வந்தனர்.
அப்போது இருவரும் கருப்பையாவிடம் தகராறு செய்து கடை முன்பு நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் விழாவில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விருதுநகர்
விருதுநகர் சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரும் சின்னபேராளியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இதனால் மாரிசெல்வத்திற்கும், விஜயலட்சுமியின் சகோதரர் மாயக்கண்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் மாயக்கண்ணன் குடும்பத்துடன் வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மாரிச்செல்வம் தகராறு செய்து மாயக்கண்ணன் அரிவாளால் வெட்டினார். இதை அவரது சித்தி ஜெயலட்சுமி தடுக்க முயன்றார். ஆனால் அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேரத மாணவர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்விக்கு என நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்களில் 28936 மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் சேராத மாணவர் களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் வேணி, மருதக்காளை, ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கள் ஆசிரியர் கள் கண்ணன், உதயகுமார், ரவி, பழனிவேல்ராஜன் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்விக்கு என நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி வரவேற்றார். உதவித்திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார். அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இந்த திட்டம் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்களில் 28936 மாணவர்கள் மாலை நேரங்களில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த மையங்கள் மாணவர்களுக்கு நல்வழி காட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இன்னும் சேராத மாணவர் களை குடியிருப்பு வாரியாக கணக்கெடுத்து சேர்க்கும் பணி தற்போது முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார் வையாளர்கள் வேணி, மருதக்காளை, ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கள் ஆசிரியர் கள் கண்ணன், உதயகுமார், ரவி, பழனிவேல்ராஜன் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களின் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண் மாணவர்கள் உள்பட சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 9, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் 4 பேர் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 4 பேரின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 4 பேரையும் வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரிடமும் சிபிசிஐடி அதிகாகிள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். கூட்டாகவும் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்செயல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்றும் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களின் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. இதேபோல் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மூதாட்டியிடம் நூதனமாக பேசி 3 பவுன் நகை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் மஞ்சனபேச்சி என்ற பொம்மி (வயது 68). இவருக்கு சில மாதங்களாக தீராத மூட்டுவலி இருந்தது. சம்பவத்தன்று அவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டியிடம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையில் உள்ள சித்தரை சந்தித்து சிகிச்சை பெற்றால் மூட்டு வலி குணமாகும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய மஞ்சன பேச்சி அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த பெண் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே நகையை கழற்றி தாருங்கள். பத்திரமாக வைத்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். மஞ்சனபேச்சியும் தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் அந்த பெண், சித்தர் தற்போது அங்கு இல்லை. எனவே வீட்டிற்கு செல்லுங்கள். சில நாட்களுக்கு பின் சென்று பார்ப்போம் என மஞ்சனபேச்சியிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து மூதாட்டியை அந்த பெண் மினிபஸ்சில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார். மஞ்சனபேச்சி அந்த பெண்ணிடம் கொடுத்த நகை குறித்த விவரங்களை மறந்துவிட்டார். அந்த பெண்ணும் நகையை திருப்பித்தரவில்லை. எனவே திட்டமிட்டு அந்த பெண் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.