என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தூர் சடையம்பட்டியில் மூடப்பட்டிருக்கும் தீப்பெட்டி ஆலைகள்
    X
    சாத்தூர் சடையம்பட்டியில் மூடப்பட்டிருக்கும் தீப்பெட்டி ஆலைகள்

    மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்பு- தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

    தீப்பெட்டி உற்பத்தி தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    சாத்தூர்:

    பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் காரணமாகவும் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு, சல்பர் மற்றும் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் 50 சதவீதம் முதல் 140 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாலும், தீப்பெட்டி தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

    மேலும் தீப்பெட்டி பண்டல்களுக்கு முறையான விலை கிடைக்காததால் அதிக அளவிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்து இயங்கும் சிறு தொழிற்சாலைகள் அனைத்தும் தொழில் பாதிப்பு காரணமாக இன்று முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன.

    வருகிற 17-ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக இதனை நம்பியுள்ள சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இழந்துள்ளனர்.

    ஏற்கனவே சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை இன்றி விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில் பிரதானமாக எந்த தொழிலும் இல்லாத சூழ்நிலையில் தீப்பெட்டி தொழிலை மட்டுமே நம்பி இருந்த சாத்தூர் பகுதி மக்களுக்கு இந்த வேலைநிறுத்த போராட்டம் பேரிடியாக அமைந்துள்ளது.




    Next Story
    ×