என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்கள்
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு- 4 பேருக்கு நீதிமன்றக் காவல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களின் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகரைச் சேர்ந்த 22 வயது பட்டியலின இளம்பெண் மாணவர்கள் உள்பட சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 9, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் 4 பேர் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், 4 பேரின் விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 4 பேரையும் வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஹரிஹரன், ஜீனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரிடமும் சிபிசிஐடி அதிகாகிள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். கூட்டாகவும் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்செயல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்றும் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றும் விசாரணை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர்களின் நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. இதேபோல் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Next Story






