என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநாடு.
இந்திய கம்யூனிஸ்டு தாலுகா மாநாடு
விருதுநகர் அருகே இந்திய கம்யூனிஸ்டு தாலுகா மாநாடு நடந்தது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2வது தாலுகா மாநாடு நடைபெற்றது.இதில் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் இந்த மாநாட்டில் வத்திராயிருப்பு தாலுகாவில் கருவூலம் அமைக்க வேண்டும். போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அமைக்க வேண்டும். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
வத்திராயிருப்பு அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். வருசநாடு மலை பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வத்திராயிருப்பில் இருந்து அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு சுற்று வட்டார பஸ் வசதி செயல் படுத்த வேண்டும். கண்மாய் மீன் பாசத்தை 5 வருடங்களுக்கு ஒரு முறை என்பதை ரத்து செய்துவிட்டு வருடத்திற்கு ஒருமுறை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் நெல்கொள்முதல் நிலையங்களை விரிவுபடுத்தவும்,விவசாயிகளுக்கு நெல் களம் அமைத்துத் தரவேண்டும்.
வத்திராயிருப்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்துக்கொடுக்க வேண்டும்.சுந்தரபாண்டியத்தில் இருந்து செல்லும்போது நுழைவாயில் பகுதியில் உள்ள பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரிசாமி, லிங்கம், தாலுகா செயலாளர் கோவிந்தன், துணைச்செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.
Next Story






