என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து பா.ம.க. மாநில பொருளாளர், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் போன்ற பல்வேறு நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் டாக்டர் ராமதாசை நேற்று அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 45 நிமிடம் சந்தித்து விட்டு அங்கிருந்து சென்றார். மேலும் ராமதாசை சமாதானம் செய்வதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சிலரை டாக்டர்.ராமதாஸ் நியமனம் செய்ய உள்ளார். இதனால் தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க.வினர் வருகை தந்துள்ளனர்.

    மேலும் ரெயில்வே துறை முன்னாள் மத்திய இணை மந்திரி அரங்கவேலு, பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் ஆகியோர் டாக்டர்.ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இன்றும் பா.ம.க. நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

    • அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.
    • ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்துள்ளார். அன்புமணியுடன் அவரது 3-வது மகள் சஞ்சுத்ராவும் தைலாபுரத்திற்கு வந்துள்ளார்.

    அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.

    அதன்படி, ராமதாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய முடிவை அறிவிப்பார் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் முகுந்தனுக்கு பதிலாக சுரேஷுக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என பா.ம.க. வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி ராமதாசை பற்றி பல பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும் கடந்த 2 நாட்களாக அன்புமணி ஆதரவாளர்களுக்கு மாற்றாக புதியதாக விழுப்புரம், மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், திருவள்ளூர், ஈரோடு, போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமித்தார். மேலும் மாநில பொருளாளர் திலக பாமாவுக்கு பதிலாக திருப்பூரை சேர்ந்த சையத் மன்சூர் உசேனை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்த நிலையில் மாநில பொருளாளர் திலகபாமா மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் போன்ற பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் தொடர்வார்கள் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சென்னையில் நடந்த பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று ஆடிட்டர் சுப்புரத்தினம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பாபு ஆகியோர் டாக்டர் ராமதாசை சமாதானம் செய்ய தைலாபுரம் தோட்டத்துக்கு வந்துள்ளனர். 9.40 மணியளவில் சென்ற இவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாக்டர் ராமதாசுடன் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் தற்போது டாக்டர் ராமதாஸை சந்திக்க வந்துள்ளார். முகுந்தன் இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் முகுந்தனுக்கு பதிலாக சுரேஷுக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என பா.ம.க. வட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கும் டாக்டர் ராமதாஸ் மாவட்ட பொறுப்புகள் வழங்க உள்ளதாகவும் பா.ம.க. வட்டாரத்தில் தெரிய வருகிறது.

    • பா.ம.க.வில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிரச்சனை.
    • பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் பா.ம.க. சிதற வேண்டும் என நினைப்பேனா.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ம.க.வில் ஏற்பட்டுள்ளது உட்கட்சி பிரச்சனை. இது குறித்து கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. நான் கட்சிக்கும் ராமதாஸ்-அன்புமணிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கட்சிக்காகவும் மக்கள் பிரச்சனைக்காகவும் உழைத்தவன் நான். ஆனால் என்னை பற்றி அவதூறு கருத்துகளை சிலர் பரப்பி வருகின்றனர்.

    ராமதாசும் அன்புமணியும் விரைவில் இணைய வேண்டும் என்பது தான் பா.ம.க.வினரின் ஆசை. கால சூழ்நிலையில் பா.ம.க.வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது சோதனையான காலம். என்ன காரணமோ தெரியவில்லை. பா.ம.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ம.க. விரிசலுக்கு நான் எந்த விதத்திலும் காரணமில்லை. இந்த தகவலை கேட்ட நான் கண்ணீர் விட்டு கதறினேன். பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நான் பா.ம.க. சிதற வேண்டும் என நினைப்பேனா.

    நான் 2 முடிவுகள் எடுத்துள்ளேன். ஒன்று குடும்பத்தோடு தலைமறைவு ஆவது. மற்றொன்று உயிரை துறப்பது. இது தான் வழி என நினைக்கிறேன். என்னை பற்றி உங்களுக்கு தெரியும். ராமதாஸ், அன்புமணியை சந்தித்து சமாதானம் பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.
    • திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க வந்த கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு நான் காரணம் என்ற செய்தியை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.

    * பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் என்பதை எப்படி ஏற்பேன்.

    * மனசாட்சிபடி செயல்பட வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்.

    * காலச்சூழலால் பா.ம.க.வில் ஏற்பட்ட நெருக்கடியை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறோம்.

    * ஒன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து இருவரிடமும் பேசி வருகின்றேன்.

    * திலகபாமாவை பொறுப்பில் இருந்து எடுக்க வேண்டாம் என ராமதாசிடம் சண்டையிட்டேன்.

    * எந்த பொறுப்பாளர்களையும் மாற்ற வேண்டாம் என ராமதாசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

    * ராமதாசும், அன்புமணியும் சந்தித்தால் கட்சி வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய அளவில் உதவும்.

    * அன்புமணியிடமும் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கிறோம்.

    * ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசினார் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியில் நிலவும் சூழல்களால் சொல்ல முடியாத அளவுக்கு மன உளைச்சலில் இருக்கிறேன்.
    • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நான் எப்போது கூறினேன்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். கட்சி தலைமை பண்பு, பக்குவம் இல்லாதவர் எனவும் குற்றம் சாட்டினார். இது அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் இன்று முதல் 3 நாட்கள் அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க தொண்டர்கள் உச்சகட்ட மனஉளைச்சல், மனவேதனையில் இருக்கிறோம். சொல்லொனா துயரத்தில் உள்ளோம். அனைத்து நெருக்கடியையும் கடந்து வருவோம். அரசியலே வேண்டாம் என்ற அளவுக்கு மன உளைச்சலில் உள்ளேன். எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்ய போகிறேன் என்று உங்களுக்கு யார் சென்னது. டாக்டர் ராமதாஸ் எனக்கு வழங்கிய எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்யமாட்டேன். உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் ராமதாஸ். அவர் தான் எங்களுக்கு கடவுள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்.
    • பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

    தைலாபுரம்:

    பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு அக்கட்சியில் கவுரவத் தலைவராக உள்ள ஜி.கே. மணிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே அன்புமணி மீது ராமதாஸ் நேற்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து அன்புமணி பா.ம.க.வில் உள்ள பல அணி நிர்வாகிகளை இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பானது சோழிங்கநல்லூரில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது.

    ஆலோசனையில் பங்கேற்குமாறு நிர்வாகிகளுக்கு நேற்று அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பா.ம.க. நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆலோசனையில் பங்கேற்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டம் நிர்வாகிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசுவதற்காக ஜி.கே.மணி தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    கேள்வி கேட்பவர்களிடம் என்னவென்று சொல்வது என தெரியவில்லை. நெருக்கடியான சூழலில் மன உளைச்சலில் இருக்கிறோம். மனவேதனை படுகிறோம்.

    எந்த கேள்விக்கும் தற்போது பதில் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன். பா.ம.க.வில் ஒரு நெருக்கடியான சூழல் உள்ளது. பழைய நிலைக்கு கட்சி வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

    பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்றார். 

    • பா.ம.க. செயல் தலைவர் பதவியை ஏற்று அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்.
    • மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் வந்தபோதே நான் செத்துவிட்டேன்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

    * என்ன தவறு செய்துவிட்டேன் என கேள்விகேட்டு கட்சிக்காரர்களிடமும், மக்களிடமும் என்னை குற்றவாளியாக அடையாளம் காட்டி அனுதாபம் தேட அன்புமணி முயல்கிறார். தவறான ஆட்டத்தை தொடங்கி முதலில் அடித்து ஆட தொடங்கியது அவர்தான்.

    * இதையெல்லாம் நான் ஏதோ போகிறப்போக்கில் சும்மா சொல்லவில்லை. ஆதாரத்தோடு, ஒளிவு மறைவின்றி நடந்ததை அப்படியே வெளிப்படுத்துகிறேன்.

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தால் குறைந்தது மூன்று இடமாவது கிடைத்திருக்கும். அவர்களும் 6 முதல் 7 இடங்களுக்கு மேலேவே ஜெயித்திருப்பார்கள்.

    * ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் போட்டு உடைத்து விட்டார் அன்புமணி.

    * பா.ம.க. செயல் தலைவர் பதவியை ஏற்று அன்புமணி சுற்றுப்பயணம் செல்ல வேண்டும்.

    * மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் வந்தபோதே நான் செத்துவிட்டேன்.

    * எனக்கு பொறுப்பு வேண்டாம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

    * தேவைப்பட்டால் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன் என்றார். 

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என கூறினேன்.
    • குடும்பத்தில் யாரும் அமைச்சராக வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

    தைலாபுரம்:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அன்புமணி அடம்பிடித்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * பட்டாளி மக்கள் கட்சியை நான் பார்த்துகொள்கிறேன் என 6 வருடங்களுக்கு முன் அன்புமணி கூறினார்.

    * அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நான் நீக்க போவதாக பொய் பேசினார்.

    * பொய்யை கூசாமல் பேசுபவர் அன்புமணி.

    * கட்சி அடிப்படை உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என அன்புமணி கூறியுள்ளார். இது இரண்டாவது பொய்.

    * பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என கூறினேன்.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி என அன்புமணி அடம்பிடித்தார்.

    * பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், அவரது மனைவியும் எனது காலை பிடித்து அழுதனர்.

    * எனக்கு 16 பஞ்சாயத்துகளை அன்புமணி தரப்பினர் வைத்தனர்.

    * பா.ஜ.க கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாவிடில் நீங்க எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்றார் அன்புமணி.

    * அன்புமணியை தலைவராக்க 8 நாட்களில் பொதுக்குழுவை ஏற்பாடு செய்தனர்.

    * அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர்.

    * குடும்பத்தில் யாரும் அமைச்சராக வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

    * அன்புமணியை மத்திய அமைச்சராக்க ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்தனர்.

    * நான் கூட்டிய கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் அன்புமணி பேசியதாக ராமதாஸ் கூறினார். 

    • அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை.
    • காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்க முடியாது.

    தைலாபுரம்:

    தருமபுரி பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசிய தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    * தருமபுரி, சேலத்திற்கு சென்ற போது நான் மைக்கில் பேசக்கூடாது என அன்புமணி கூறினார்.

    * தங்கியிருக்கும் அறையில் இருந்து நான் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என அன்புமணி ஆணையிட்டார்.

    * அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.

    * அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை.

    * காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்க முடியாது.

    * முகுந்தன் விவகாரத்தில் பெற்ற தாயின் மீது அன்புமணி ராமதாஸ் பாட்டிலை தூக்கி அடித்தார்.

    * நான் யாரையும் பார்க்க கூடாது என அன்புமணி எதிர்பார்க்கிறார்.

    * தலைவர் என்பவர் அனைவரது கருத்துகளையும் கேட்க வேண்டும்.

    * பாட்டாளி மக்கள் கட்சி யார் வளர்த்த கட்சி? என அன்புமணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

     


    இதற்கிடையே தொண்டரின் கடிதத்தை படித்து கொண்டிருந்த போது ராமதாஸ் கண்கலங்கி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். 

    • அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.
    • 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?

    தைலாபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தான் செய்த தவறுகளை மறைத்து பட்டாளி மக்கள் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்ப அன்புமணி முயற்சி செய்கிறார்.

    * கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார்.

    * முகுந்தன் இளைஞரணி தலைவராக்கப்பட்டபோது மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?

    * அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.

    * அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என பலரும் வருந்தினார்கள்.

    * அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.

    * அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர். மேடை நாகரீகம், சபை நாகரீகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி.

    * மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா? மைக்கை தூக்கி தலையில் போடுவது போல் அன்புமணி செயல்பட்டார்.

    * பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?

    * 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?

    * கசப்பான வார்த்தைகளை பதிலாக கொடுக்கும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

    * எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறு கொண்டு பாய்கிறது என்று வேதனையுடன் கூறினார். 

    • தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார்.
    • மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.

    விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் மாணவர் முற்போக்கு அமைப்பாளர், பழங்குடி செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் இல்ல காதணி விழா மற்றும் வி.சி.க. பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.

    பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-

    மதச்சார்பின்மைக்கு எதிராக வி.சி.க. சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் நிதி தரவேண்டுமென வலியுறுத்திருக்கிறார். இனிமேல் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.

    பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக சீமான் பேசி வருகிறார். இது தேவையற்ற சர்ச்சை. தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை.

    நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் வங்கி அதனை திரும்ப பெற வேண்டும். நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்கள் ஒட்டாமல் உள்ளார்கள் என்பதற்காக தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×