என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வடிவேல் ராவணன் நீக்கம் - புதிய பொதுச்செயலாளர் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
- ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
- பா.ம.க. சார்பில் 3 முறை தேர்தலில் நின்றவர் முரளி சங்கர்.
திண்டிவனம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பா.ம.க. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை அப்பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க.வின் புதிய பொதுச்செயலாளராக முரளிசங்கர் என்பவர் நியமனம் செய்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






