என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கே.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் சாமுவேல். அவரது மகன் ஜேம்ஸ் பால். ஐடி நிறுவன ஊழியர்.

    இவரது செல்போனில் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி லிங்க் ஒன்று வந்தது. ஜேம்ஸ்பால் திறந்து பார்த்தபோது ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஜேம்ஸ் பால் ஆன்லைன் வேலைக்காக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் இந்த மாதம் 1-ந் தேதி வரை முன்பணமாக ரூ 5. 78 லட்சத்தை செலுத்தினார்.

    ஜேம்ஸ் பாலின் வங்கி கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

    இது குறித்து வாட்ஸ் அப்பில் தகவல் அளித்தவரிடம் கேட்டபோது மேலும் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என தெரிவித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா உள்பட 5 சகோதரர்களும், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர்.
    • முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

    அணைக்கட்டு:

    நடிகர் சூரி நடித்த சினிமாவில் வாலிப வயதில் காதுகுத்து விழா நடத்தி மொய் வசூல் செய்வது போல காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும்.

    அதைபோல அனைவரும் வியக்கும் வகையில் 65 வயது முதியவர், அவரது சகோதரருக்கும் காதுகுத்து விழா நடத்தி ஆட்டுக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது60) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா (55) உள்பட 5 சகோதரர்களும், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர்.

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த சகோதரர்களான முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு அவரது பெற்றோர் காது குத்து விழா நடத்தவில்லை.

    மற்றவர்களுக்கு அவரது பெற்றோர் திருப்பதிக்கு அழைத்துச் சென்று சிறுவயதிலேயே மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.

    இதனால் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த அவரது குடும்பத்தினர் ஒன்றிணைந்து 2 பேருக்கும் காது குத்து விழா நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி முனிவேல் மற்றும் ராஜா குடும்பத்தினர் மருதவல்லிபாளையம் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலான கன்னிக்கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி பூஜை செய்தனர்.

    உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு, அவர்களது 90 வயது தாய் மாமனான தங்கவேல் மடியில் உட்கார வைத்து தடப்புடலாக காது குத்து நடந்தது. விழாவில் ஏராளமானோர் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது.

    காது குத்து விழாவுக்கு வந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்ட வகை வகையான சீர்வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு மொய் எழுதினர்.

    பம்பை வாத்தியம் மற்றும் மேலதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் ஊர்வலமாக சென்றதை கிராம மக்கள் அதிசயமாக வேடிக்கை பார்த்தனர்.

    குடும்பத்தினருடன் காது குத்தி கொண்ட முனிவேல் மற்றும் ராஜா ஆகியோர் குதூகலமாக நடந்த விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.

    இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    ராஜஸ்தான் மாநிலம் தோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீர்பால்கட்போ (35).

    இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வேலூருக்கு வந்தார். காட்பாடி தாராபடவேட்டில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்தார்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை மாடி படியில் ஏறிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தீராத வயிற்று வலியால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் குமரகுரு ( வயது 50). இவரது மனைவி அமலு (43). தம்பதியினருக்கு பிள்ளைகள் உள்ளனர்.

    அமுலு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் கூட நோய் குணமடையவில்லை.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாது அமலு தனது விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில், புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஜமேந்தார் தோப்பு தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் புகழேந்தி (வயது 20) இவர் கொரியர் சர்வீஸில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டாவில் இருந்து வேலூர் நோக்கி அவரது பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்
    • அமைச்சர் துரைமுருகன் பேச்சு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண் டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    கே.வி.குப்பத்தில் நீண்ட நாட்களாக மகளிர் கல்லூரி வேண்டுமென்று மக்களின் கோரிக்கை உள்ளது. அதை கண்டிப்பாக ஏற்படுத்தி தருவேன்.

    இதே கே.வி.குப்பம் பகுதியில்தான் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். என்னை கருணாநிதியிடம் அறிமுகப்படுத்தி வைத்ததார். அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டதும் அன்று நடந்த கூட்டமும் இந்த கே.வி.குப்பம் மண்ணில்தான்.

    சென்னை பச்சையப்பன் கல்லூரி தேர்தலில் நின்றபோது எம்.ஜி.ஆர். ரூ.15 ஆயிரம் தேர்தல் செலவுக்கு கொடுத்து என்னை தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அரசியலில் இன்று நான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.

    நான் சுவீடன், நார்வே, பிலிப்பைன்ஸ், டென்மார்க் ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு சாலையில் ஆட்டோக்கள் அதிகளவில் காணவில்லை. அதிகமான மக்கள் சைக்கிள் தான் ஓட்டினர்.

    அப்போது ஒருவரிடம் கேட்டேன். அவர் அங்கு அரசு வேலையில் பெரிய அதிகாரியாக பணியில் உள்ளார். அவர் கூறியபோது, நாங்கள் இங்கு குளிர் பிரதேசத்தில் உள்ளோம். எங்களுக்கு சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் சூடாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது என்றார். எனவே மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.ஜி. ஏரியூர் அருகே அருகே உள்ள தாமோதரன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு யாரேனும் இறந் தால் அங்குள்ள சுடுகாட் டில் தகணம் செய்வது வழக்கம்.

    இப்பகுதி, மக்களுக்கென தனியாக சுமார் 1 ஏக்கர் 20 சென்டில் சுடுகாடு அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் சுடுகாட்டை முழுவதும் ஆக்கிரமித்து அதனை உழுது பயிர் செய்துள்ளார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் கொடுத்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் தனி வட்டாட்ச்சியர் முரளிதரன் (ஆதிதிராவிடர் நலத்துறை) முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

    வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விரட்டிச் சென்று பிடித்த உறவினர்கள்
    • ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், செதுவாலையை சேர்ந்தவர் ஜாவித் ரிஸ்வான் (வயது 32). இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வழிப்பறி

    நேற்று இரவு வேலை முடிந்து வேலூரில் இருந்து செதுவாலை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். மேல் மொணவூர் சர்வீஸ் சாலையில் சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் ஜாவித் ரிஸ்வானை வழிமடக்கினர்.

    கத்தியை கட்டி மிரட்டி ஜாவித் ரிஸ்வானிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். ஜாவித் ரிஸ்வான் செய்வது அறியாது தவித்தபடி நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது ஜாவித் ரிஸ்வானின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சினிமா பார்த்துவிட்டு அந்த வழியாக சென்றனர்.

    ஜாவித் ரிஸ்வான் நின்று கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் ஏன் இங்கு தனியாக நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டனர். வாலிபர்கள் 3 பேர் செல்போன் பணத்தை பிடுங்கி சென்றதாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜாவித் ரிஸ்வானின் உறவினர்கள் வழிப்பறி வாலிபர்களை பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். கைகலப்பு ஏற்பட்டது. வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    ஒருவரை மட்டும் பிடித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில் அவர் வேலூர், கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 22) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி துணிகரம்
    • 2 வாலிபர்கள் கைது

    வேலூர்:

    வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). இவர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 2 வாலிபர்கள் பாலாஜியின் பெட்டிக்க டைக்கு சென்று கத்தியை காட்டி ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டியதாகவும், அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வாலிபர்கள் பாலாஜியின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1,000-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அத ன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா க்களை ஆய்வு செய்து விசாரித்தார்.

    விசாரணையில் வியாபாரியிடம் பணம் பறித்தது வேலூர் சைதாப் பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23), ஓல்டுடவுனை சேர்ந்த விக்னேஷ் (23) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் காகிதப்பட்டறை பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 2 பேரையும் பிடிக்க முயன்றபோது தப்பியோட முயன்று தவறி கீழே விழுந்தனர்.

    அதில் அவர்களுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 2 பேருக்கும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • போலீசார் மடக்கி பிடித்தனர்
    • 9 கட்டைகள், கத்தி பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஏட்டுகள் மோசஸ், சுரேஷ் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரோந்து சென்றனர்.

    குடியாத்தம் அடுத்த இந்திரா நகர் ஆற்றோரம் ரோந்து சென்றபோது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார.

    போலீசார் அந்த மர்ம நபர் அருகில் சென்றதும் அவர் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு இருட்டில் தப்பி ஓடி விட்டார். போலீசாரும் விரட்டிச் சென்றனர் அந்த நபர் நேரத்தில் இருட்டில் ஓடி தப்பிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மர்ம நபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு மூட்டையில் 9 சந்தனமர கட்டைகளும் அதை வெட்ட பயன்படுத்திய கத்தியும் இருந்தன.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தன மரக்கட்டைகளையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    தப்பி ஓடிய மர்ம நபர் குறித்தும் சந்தன மரக்கட்டைகள் எங்கிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டது, எங்கு கொண்டு செல்ல இந்த வழியாக வந்தனர், இந்த கும்பல் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சந்தன மரக் கட்டைகளை பிடித்த குடியாத்தம் டவுன் போலீசாரை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

    • எஸ்.பி. எச்சரிக்கை
    • நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

    வேலூர்:

    குற்றங்கள் தடுப்பது குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எஸ்.பி. மணிவண் ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    கோர்ட்டில் உள்ள வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கையை, நிலுவையின்றி தாக்கல் செய்ய பட்டியல்களில் உள்ள ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்து குற்றம் நடப்பதற்கு முன்னர் தடுக்க வேண்டும்.

    மக்கள் அளிக் கும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டும். போலீசாரின் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், டிஎஸ்பிக் கள் திருநாவுக்கரசு, பழனி, ராமமூர்த்தி, இருதயராஜ், மனோகரன் மற்றும் இன்ஸ் பெக்டர்கள் பங்கேற்றனர்.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவுக் பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்கப்படும்
    • தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    வேலூர்:

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலத்திலிருந்து திருத்தணிக்கு 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 185 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    வேலூரிலிருந்து 60 சிறப்பு பஸ்களும், ஆற்காட்டிலிருந்து 30 பஸ்களும், சோளிங்கரி லிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூ ரிலிருந்து 35 பஸ்களும், ஆம்பூரிலிருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டில் இருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்தம் 185 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 9-ந் தேதி அன்று ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன்மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    பொதுமக்கள் இந்த பஸ்சை சேவையிைனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    ×