என் மலர்
வேலூர்
- தவறி விழுந்ததில் கை முறிந்தது
- 4 பைக்குகள் பறிமுதல்
வேலூர்:
காட்பாடி மெட்டுக்குளம் செக் போஸ்ட் தெருவை சேர்ந்தவர் திருகுமார். இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திருகு மாரின் மனைவி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செயினை பறித்து சென்ற நபர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன்,சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சென்று சென்னை கிண்டி பகுதியில் பதுங்கி இருந்த நபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் காட்பாடி தாரா படவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பலராமன் என்ற பாலா (வயது 28) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3 பவுன் செயின் மற்றும் 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது
- வீடுகளில் கொடி ஏற்றி கொண்டாட அறிவுரை
வேலூர்:
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
இதனை வேலூர் தபால் நிலைய கண்காணிப்பாளர் என்.ராஜகோபாலன் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது :-
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும். ஒரு கொடி ரூ.25 க்கு விற்கப்படும்.
இதனை பொதுமக்கள் வாங்கி ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை தபால் நிலைய அதிகாரி, என். முரளி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் வீரன், சுந்தர்ராஜன் மற்றும் தபால் நிலைய அலுவலர்கள் செய்திருந்தனர்.
- 250 கிலோ சிக்கியது
- ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.
அப்போது அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சுமார் 250 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் விசரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த
தினேஷ்(28) மற்றும் திலிப்திவாசி(22) என தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எடி. எஸ்.பி. மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படுத்தினர்.
வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் மொத்தம் 359 பைக், ஒரு ஆட்டோ ஏலம் விடப்பட்டது.
இதன் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 45,160 என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.
- கட்டுப்பாட்டை இழந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் கார்த்திக் (வயது 27).
இவர் பைக்கில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருகம்புத்தூர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென தறிக்கெட்டு ஓடி சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
- 10½ பவுன் நகை, பைக் பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலநகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டுக்குச் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அனிதா என்பவரின் கழுத்தில் இருந்த 2 ½ பவுன் தங்கச் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஆனந்தன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து அதனை பின்தொடர்ந்தனர்.
பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் கொள்ளையர்களின் பதிவு மிக தெளிவாக பதிவு ஆகியிருந்தது.
அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பள்ளிகொண்டா அடுத்த கீழ்வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிரஞ்சன் (வயது 25) பொய்கை பகுதியில் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவரது தம்பி நிதீஷ்குமார் (21) என தெரியவந்தது.
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கீதாஞ்சலி என்பவரிடம் 7 சவரன் செயின், அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே அரசு மருத்துவமனை நர்சு சுதா என்பவரின் கழுத்தில் இருந்த 6½ பவுன் நகையையும், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் பகுதியில் சாவித்திரி என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்ததும் சில தினங்களுக்கு முன்பு அனிதாவிடம் 2½ பவுன் நகை பறித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 10½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- மருத்துவ முகாம் நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை வேலூர் சரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து 9-வது தேசிய கைத்தறி தினவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியாத்தம் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், எம்.ஏகாம்பரம், நவீன்சங்கர், சி.என்.பாபு, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எம்.எஸ். அமர்நாத், மாவட்ட துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி ஆய்வாளர் ஷாநவாஸ் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
முடிவில் கணபதி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
- 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது
- பொதுமக்கள் அவதி
வேலுார்:
தமிழகத்தில் நடப்பாண்டில் பாதி மாதங்களுக்கு மேலாக கோடைகாலம் என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் வேலுார், திருச்சி, மதுரை உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொளுத்தத் தொடங்கிய வெயில், ஓரிரு வாரங்கள் இடைவெளி. விட்டு மீண்டும் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த ஆண்டு கோடைக்கு இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் வறண்ட நிலை காணப் படுவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக் கிறது. இந்த நிலைமை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய மும் தெரிவித்துள்ளது.
வேலுாரில் கடந்த மாதம் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்தது. ஆனால், திடீரென அந்த நிலை மாறிவிட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி வேலுார் மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதமடித் தது.
அதன்பிறகு லேசாக குறைந்த வெயில் அளவு, கடந்த 3-ந் தேதி மீண்டும். 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. நேற்றும் காலையில் இருந்தே வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகமாக இருந்தது. சாலைகளில் கானல் நீர் தெரிந்ததோடு, அனல் காற்று வீசியது.
இதனால் வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை துணியால் மூடியபடியே செல்கின்றனர். நேற்று 101.5 பாரன் ஹீட் வெப்பம் பதிவானது.
இதன்மூலம், மீண்டும் தொடங்கிய திடீர் கோடையால் வேலுார் மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
- மகள், மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அப்போது வித்யாவதி (வயது 73) என்ற மூதாட்டி ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு பிறவியிலேயே இடது கை மற்றும் இடது கால் செயல்படவில்லை.
இந்த நிலையில் எனது மூத்த மகள் செந்தமிழ்செல்வியும் அவரது கணவர் கோடீஸ்வரனும் என்னை வலுக்கட்டாயமாக குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக என்னிடம் கையெழுத்து வாங்கினார்.
என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவர்களது பெயரில் மாற்றிக் கொண்டது பின்னர் தெரிய வந்தது.
என்னை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு க்கு அழைத்துச் சென்று தனி வீட்டில் அடைத்து வைத்து மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து சித்தரவதை செய்தனர்.
எனவே மூத்த மகள் செந்தமிழ் செல்வி அவரது கணவர் கோடீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இதேபோல் காட்பாடி குகையநல்லூரை சேர்ந்த ஸ்வீட்டி மார்க்கரேட் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பெண்ணாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன் உடல்நிலை சரியில்லாமல் படிப்பை மேற்கொள்ள இயலவில்லை ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளேன் தற்போது என்னுடைய சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் எனக்கு தேவைப்படுவதால் மேற்படி நிர்வாகத்தில் கேட்டபோது அவர்கள் ஒரு லட்சம் பணம் கட்டினால் தான் கொடுக்க முடியும் என்று கூறி விட்டார்கள்.
ஏற்கனவே இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தேன் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும் அவர்கள் சான்றிதழை தர மறுக்கின்றனர்.
மேற்படி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி குடியாத்தம் ஆகிய 3 சப் டிவிஷனில் கலாச்சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் டி எஸ் பி மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படித்தனர். வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
- நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வீணா (24) என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.
சுபாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசனுடன்(21), குச்சிபாளையம் பகுதியில் உள்ள மற்றும் நண்பரை பார்க்க தனது பைக்கில் சென்றார்.
நண்பரை பார்த்துவிட்டு 2 பேரும் பைக்கில் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
போடிபேட்டை அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
- வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது
வேலூர்:
குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் 'மகளிர் உரிமை தொகை திட்டம்' அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள் முடிந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவர்களை பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
முதல்கட்ட சிறப்பு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி யுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இது, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.
விடுபட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதுவரை ஒருலட்சத்து 51 ஆயிரத்து 495 ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் வேலுார் மாவட்டத்தில் மொத்தம் 281 இடங்களில் நடக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 44 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






