என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்கள் ரூ.1,000 பெற 2 நாட்களில் 44,000 விண்ணப்பங்கள் பதிவு
- சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
- வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது
வேலூர்:
குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் 'மகளிர் உரிமை தொகை திட்டம்' அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள் முடிந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவர்களை பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
முதல்கட்ட சிறப்பு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி யுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இது, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.
விடுபட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதுவரை ஒருலட்சத்து 51 ஆயிரத்து 495 ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் வேலுார் மாவட்டத்தில் மொத்தம் 281 இடங்களில் நடக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 44 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






