என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் செயின் பறித்த திருடனுக்கு மாவுகட்டு
- தவறி விழுந்ததில் கை முறிந்தது
- 4 பைக்குகள் பறிமுதல்
வேலூர்:
காட்பாடி மெட்டுக்குளம் செக் போஸ்ட் தெருவை சேர்ந்தவர் திருகுமார். இவர் கடந்த மாதம் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி திருகு மாரின் மனைவி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து திருகுமார் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
செயினை பறித்து சென்ற நபர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வன்,சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சென்று சென்னை கிண்டி பகுதியில் பதுங்கி இருந்த நபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் காட்பாடி தாரா படவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பலராமன் என்ற பாலா (வயது 28) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3 பவுன் செயின் மற்றும் 4 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






