சொகுசு காரில் போதைப் பொருட்கள் பறிமுதல்

250 கிலோ சிக்கியது ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது
சொகுசு காரில் போதைப் பொருட்கள் பறிமுதல்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சுமார் 250 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

மேலும் விசரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த

தினேஷ்(28) மற்றும் திலிப்திவாசி(22) என தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com