என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்
- 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது
- பொதுமக்கள் அவதி
வேலுார்:
தமிழகத்தில் நடப்பாண்டில் பாதி மாதங்களுக்கு மேலாக கோடைகாலம் என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் வேலுார், திருச்சி, மதுரை உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொளுத்தத் தொடங்கிய வெயில், ஓரிரு வாரங்கள் இடைவெளி. விட்டு மீண்டும் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த ஆண்டு கோடைக்கு இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் வறண்ட நிலை காணப் படுவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக் கிறது. இந்த நிலைமை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய மும் தெரிவித்துள்ளது.
வேலுாரில் கடந்த மாதம் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்தது. ஆனால், திடீரென அந்த நிலை மாறிவிட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி வேலுார் மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதமடித் தது.
அதன்பிறகு லேசாக குறைந்த வெயில் அளவு, கடந்த 3-ந் தேதி மீண்டும். 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. நேற்றும் காலையில் இருந்தே வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகமாக இருந்தது. சாலைகளில் கானல் நீர் தெரிந்ததோடு, அனல் காற்று வீசியது.
இதனால் வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை துணியால் மூடியபடியே செல்கின்றனர். நேற்று 101.5 பாரன் ஹீட் வெப்பம் பதிவானது.
இதன்மூலம், மீண்டும் தொடங்கிய திடீர் கோடையால் வேலுார் மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.






