என் மலர்
வேலூர்
- மருத்துவ முகாம் நடைபெற்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை வேலூர் சரகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து 9-வது தேசிய கைத்தறி தினவிழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியாத்தம் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
நகர மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், எம்.ஏகாம்பரம், நவீன்சங்கர், சி.என்.பாபு, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எம்.எஸ். அமர்நாத், மாவட்ட துணை அமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி ஆய்வாளர் ஷாநவாஸ் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
முடிவில் கணபதி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
- 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது
- பொதுமக்கள் அவதி
வேலுார்:
தமிழகத்தில் நடப்பாண்டில் பாதி மாதங்களுக்கு மேலாக கோடைகாலம் என்பது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதை நிரூபிக்கும் வகையில் வேலுார், திருச்சி, மதுரை உட்பட பல மாவட்டங்களிலும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொளுத்தத் தொடங்கிய வெயில், ஓரிரு வாரங்கள் இடைவெளி. விட்டு மீண்டும் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த ஆண்டு கோடைக்கு இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக பருவநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் வறண்ட நிலை காணப் படுவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக் கிறது. இந்த நிலைமை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய மும் தெரிவித்துள்ளது.
வேலுாரில் கடந்த மாதம் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்தது. ஆனால், திடீரென அந்த நிலை மாறிவிட்டது. கடந்த மாதம் 31-ந் தேதி வேலுார் மாவட்டத்தில் மீண்டும் வெயில் சதமடித் தது.
அதன்பிறகு லேசாக குறைந்த வெயில் அளவு, கடந்த 3-ந் தேதி மீண்டும். 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. நேற்றும் காலையில் இருந்தே வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகமாக இருந்தது. சாலைகளில் கானல் நீர் தெரிந்ததோடு, அனல் காற்று வீசியது.
இதனால் வாகனங்களில் செல்பவர்கள் முகத்தை துணியால் மூடியபடியே செல்கின்றனர். நேற்று 101.5 பாரன் ஹீட் வெப்பம் பதிவானது.
இதன்மூலம், மீண்டும் தொடங்கிய திடீர் கோடையால் வேலுார் மக்கள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர்.
- மகள், மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அப்போது வித்யாவதி (வயது 73) என்ற மூதாட்டி ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு பிறவியிலேயே இடது கை மற்றும் இடது கால் செயல்படவில்லை.
இந்த நிலையில் எனது மூத்த மகள் செந்தமிழ்செல்வியும் அவரது கணவர் கோடீஸ்வரனும் என்னை வலுக்கட்டாயமாக குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக என்னிடம் கையெழுத்து வாங்கினார்.
என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவர்களது பெயரில் மாற்றிக் கொண்டது பின்னர் தெரிய வந்தது.
என்னை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு க்கு அழைத்துச் சென்று தனி வீட்டில் அடைத்து வைத்து மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து சித்தரவதை செய்தனர்.
எனவே மூத்த மகள் செந்தமிழ் செல்வி அவரது கணவர் கோடீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
இதேபோல் காட்பாடி குகையநல்லூரை சேர்ந்த ஸ்வீட்டி மார்க்கரேட் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் பெண்ணாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன் உடல்நிலை சரியில்லாமல் படிப்பை மேற்கொள்ள இயலவில்லை ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளேன் தற்போது என்னுடைய சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் எனக்கு தேவைப்படுவதால் மேற்படி நிர்வாகத்தில் கேட்டபோது அவர்கள் ஒரு லட்சம் பணம் கட்டினால் தான் கொடுக்க முடியும் என்று கூறி விட்டார்கள்.
ஏற்கனவே இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தேன் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும் அவர்கள் சான்றிதழை தர மறுக்கின்றனர்.
மேற்படி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி குடியாத்தம் ஆகிய 3 சப் டிவிஷனில் கலாச்சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த 363 வாகனங்கள் இன்று நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் டி எஸ் பி மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏலத்தில் பங்கேற்க வந்தவர்களை ஒழுங்கு படித்தனர். வாகன ஏலத்தில் கலந்து கொள்ள ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
- நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி வீணா (24) என்ற மனைவியும், 3 வயது மகளும் உள்ளனர்.
சுபாஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசனுடன்(21), குச்சிபாளையம் பகுதியில் உள்ள மற்றும் நண்பரை பார்க்க தனது பைக்கில் சென்றார்.
நண்பரை பார்த்துவிட்டு 2 பேரும் பைக்கில் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
போடிபேட்டை அருகே வந்தபோது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
- வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது
வேலூர்:
குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் 'மகளிர் உரிமை தொகை திட்டம்' அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணிகள் முடிந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவர்களை பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
முதல்கட்ட சிறப்பு முகாம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி யுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, 2-ம் கட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இது, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது.
விடுபட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதுவரை ஒருலட்சத்து 51 ஆயிரத்து 495 ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் வேலுார் மாவட்டத்தில் மொத்தம் 281 இடங்களில் நடக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 44 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி துணிகரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி கே.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் சாமுவேல். அவரது மகன் ஜேம்ஸ் பால். ஐடி நிறுவன ஊழியர்.
இவரது செல்போனில் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி லிங்க் ஒன்று வந்தது. ஜேம்ஸ்பால் திறந்து பார்த்தபோது ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஜேம்ஸ் பால் ஆன்லைன் வேலைக்காக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் இந்த மாதம் 1-ந் தேதி வரை முன்பணமாக ரூ 5. 78 லட்சத்தை செலுத்தினார்.
ஜேம்ஸ் பாலின் வங்கி கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.
இது குறித்து வாட்ஸ் அப்பில் தகவல் அளித்தவரிடம் கேட்டபோது மேலும் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா உள்பட 5 சகோதரர்களும், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர்.
- முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
அணைக்கட்டு:
நடிகர் சூரி நடித்த சினிமாவில் வாலிப வயதில் காதுகுத்து விழா நடத்தி மொய் வசூல் செய்வது போல காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும்.
அதைபோல அனைவரும் வியக்கும் வகையில் 65 வயது முதியவர், அவரது சகோதரருக்கும் காதுகுத்து விழா நடத்தி ஆட்டுக்கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் முனிவேல் (வயது60) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
முனிவேலுடன் பிறந்தவர்கள் ராஜா (55) உள்பட 5 சகோதரர்களும், 3 சகோதரிகள் என மொத்தம் 8 பேர் உள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த சகோதரர்களான முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு அவரது பெற்றோர் காது குத்து விழா நடத்தவில்லை.
மற்றவர்களுக்கு அவரது பெற்றோர் திருப்பதிக்கு அழைத்துச் சென்று சிறுவயதிலேயே மொட்டை அடித்து காது குத்து விழா நடத்தியுள்ளனர்.
இதனால் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் காது குத்தாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவரது குடும்பத்தினர் ஒன்றிணைந்து 2 பேருக்கும் காது குத்து விழா நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி முனிவேல் மற்றும் ராஜா குடும்பத்தினர் மருதவல்லிபாளையம் கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வம் கோவிலான கன்னிக்கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி பூஜை செய்தனர்.
உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் முனிவேல் மற்றும் ராஜா ஆகியோருக்கு, அவர்களது 90 வயது தாய் மாமனான தங்கவேல் மடியில் உட்கார வைத்து தடப்புடலாக காது குத்து நடந்தது. விழாவில் ஏராளமானோர் குவிந்ததால் விழாக்கோலம் பூண்டது.
காது குத்து விழாவுக்கு வந்த உறவினர்கள் 50-க்கும் மேற்பட்ட வகை வகையான சீர்வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆட்டுக்கறி விருந்து பரிமாறப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு மொய் எழுதினர்.
பம்பை வாத்தியம் மற்றும் மேலதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் ஊர்வலமாக சென்றதை கிராம மக்கள் அதிசயமாக வேடிக்கை பார்த்தனர்.
குடும்பத்தினருடன் காது குத்தி கொண்ட முனிவேல் மற்றும் ராஜா ஆகியோர் குதூகலமாக நடந்த விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.
இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- வடமாநிலத்தை சேர்ந்தவர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
ராஜஸ்தான் மாநிலம் தோலாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீர்பால்கட்போ (35).
இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் வேலூருக்கு வந்தார். காட்பாடி தாராபடவேட்டில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்தார்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை மாடி படியில் ஏறிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தீராத வயிற்று வலியால் விரக்தி
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமம், அண்ணா நகரை சேர்ந்தவர் குமரகுரு ( வயது 50). இவரது மனைவி அமலு (43). தம்பதியினருக்கு பிள்ளைகள் உள்ளனர்.
அமுலு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் கூட நோய் குணமடையவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாது அமலு தனது விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில், புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா ஜமேந்தார் தோப்பு தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் புகழேந்தி (வயது 20) இவர் கொரியர் சர்வீஸில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டாவில் இருந்து வேலூர் நோக்கி அவரது பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் இறைவன்காடு அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பள்ளி கொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண் டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-
கே.வி.குப்பத்தில் நீண்ட நாட்களாக மகளிர் கல்லூரி வேண்டுமென்று மக்களின் கோரிக்கை உள்ளது. அதை கண்டிப்பாக ஏற்படுத்தி தருவேன்.
இதே கே.வி.குப்பம் பகுதியில்தான் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். என்னை கருணாநிதியிடம் அறிமுகப்படுத்தி வைத்ததார். அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டதும் அன்று நடந்த கூட்டமும் இந்த கே.வி.குப்பம் மண்ணில்தான்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தேர்தலில் நின்றபோது எம்.ஜி.ஆர். ரூ.15 ஆயிரம் தேர்தல் செலவுக்கு கொடுத்து என்னை தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அரசியலில் இன்று நான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.
நான் சுவீடன், நார்வே, பிலிப்பைன்ஸ், டென்மார்க் ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு சாலையில் ஆட்டோக்கள் அதிகளவில் காணவில்லை. அதிகமான மக்கள் சைக்கிள் தான் ஓட்டினர்.
அப்போது ஒருவரிடம் கேட்டேன். அவர் அங்கு அரசு வேலையில் பெரிய அதிகாரியாக பணியில் உள்ளார். அவர் கூறியபோது, நாங்கள் இங்கு குளிர் பிரதேசத்தில் உள்ளோம். எங்களுக்கு சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் சூடாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது என்றார். எனவே மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






