கோவில் திருவிழாவில் 2 பேருக்கு கத்தி குத்து

வாலிபர் கைது போலீசார் விசாரணை
கோவில் திருவிழாவில் 2 பேருக்கு கத்தி குத்து
Published on

வேலூர்:

வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழா வையொட்டிசாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைப்பார்த்த அதேபகு தியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து, ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர் கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

இது குறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com