என் மலர்
நீங்கள் தேடியது "Devotees carrying kavadis are fine"
- பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
- 800 போலீசார் பாதுகாப்பு
வேலூர்:
தமிழகத்தில் ஆடி மாதம் வந்தாலே அம்மன் கோவில்களில் விழாக்கள் களை கட்டுகின்றன.
அதேபோல் ஆடி கிருத்திகை விழா வடமாவட்ட முருகன் கோவில்களில் களை கட்டுகிறது. கோவில்களுக்கு பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்க டனை செலுத்துகின்றனர்.
திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு திருத்தணி கோவிலுக்கு வேலூரில் இருந்து 60 சிறப்பு பஸ்களும்,ஆற்காட்டில் இருந்து 30 சிறப்பு பஸ்களும், சோளிங்கரிலிருந்து 10 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 35 பஸ்களும், ஆம்பூரில் இருந்து 10 பஸ்களும், பேரணாம்பட்டி லிருந்து 10 பஸ்களும், குடியாத்தத்தில் இருந்து 30 பஸ்களும் என மொத்த 185 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் வரும் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
மேலும் நாளை ரத்தினகிரி, வள்ளிமலை, கைலாசகிரி, ஜலகம்பாறை, அணைக்கட்டு அருகே உள்ள முத்துக்குமரன் மலை, பாலமதி ஆகிய ஊர்களில் உள்ள முருகப்பெருமாள் கோவில்களில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவுக்கும் பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று முதல் நாளை வரை 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடி கிருத்திகையொட்டி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.






