என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்தரவதை செய்தனர்"

    • மகள், மருமகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    அப்போது வித்யாவதி (வயது 73) என்ற மூதாட்டி ஆம்புலன்சில் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு பிறவியிலேயே இடது கை மற்றும் இடது கால் செயல்படவில்லை.

    இந்த நிலையில் எனது மூத்த மகள் செந்தமிழ்செல்வியும் அவரது கணவர் கோடீஸ்வரனும் என்னை வலுக்கட்டாயமாக குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக என்னிடம் கையெழுத்து வாங்கினார்.

    என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவர்களது பெயரில் மாற்றிக் கொண்டது பின்னர் தெரிய வந்தது.

    என்னை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு க்கு அழைத்துச் சென்று தனி வீட்டில் அடைத்து வைத்து மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக கூறி மாத்திரையை கொடுத்து சித்தரவதை செய்தனர்.

    எனவே மூத்த மகள் செந்தமிழ் செல்வி அவரது கணவர் கோடீஸ்வரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    இதேபோல் காட்பாடி குகையநல்லூரை சேர்ந்த ஸ்வீட்டி மார்க்கரேட் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் பெண்ணாத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன் உடல்நிலை சரியில்லாமல் படிப்பை மேற்கொள்ள இயலவில்லை ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் செலுத்தியுள்ளேன் தற்போது என்னுடைய சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் எனக்கு தேவைப்படுவதால் மேற்படி நிர்வாகத்தில் கேட்டபோது அவர்கள் ஒரு லட்சம் பணம் கட்டினால் தான் கொடுக்க முடியும் என்று கூறி விட்டார்கள்.

    ஏற்கனவே இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தேன் மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும் அவர்கள் சான்றிதழை தர மறுக்கின்றனர்.

    மேற்படி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    ×