என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special counter for sale of National Flag"

    • சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது
    • வீடுகளில் கொடி ஏற்றி கொண்டாட அறிவுரை

    வேலூர்:

    வேலூர் தலைமை தபால் நிலையத்தில் சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி விற்பனை செய்ய சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனை வேலூர் தபால் நிலைய கண்காணிப்பாளர் என்.ராஜகோபாலன் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசியதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும். ஒரு கொடி ரூ.25 க்கு விற்கப்படும்.

    இதனை பொதுமக்கள் வாங்கி ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை தபால் நிலைய அதிகாரி, என். முரளி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் வீரன், சுந்தர்ராஜன் மற்றும் தபால் நிலைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×