என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி ஏற்படுத்தி தருவேன்
- மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண் டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலந்து கொண்டு மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-
கே.வி.குப்பத்தில் நீண்ட நாட்களாக மகளிர் கல்லூரி வேண்டுமென்று மக்களின் கோரிக்கை உள்ளது. அதை கண்டிப்பாக ஏற்படுத்தி தருவேன்.
இதே கே.வி.குப்பம் பகுதியில்தான் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். என்னை கருணாநிதியிடம் அறிமுகப்படுத்தி வைத்ததார். அரசியலுக்கு அஸ்திவாரம் போட்டதும் அன்று நடந்த கூட்டமும் இந்த கே.வி.குப்பம் மண்ணில்தான்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தேர்தலில் நின்றபோது எம்.ஜி.ஆர். ரூ.15 ஆயிரம் தேர்தல் செலவுக்கு கொடுத்து என்னை தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அரசியலில் இன்று நான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும்தான்.
நான் சுவீடன், நார்வே, பிலிப்பைன்ஸ், டென்மார்க் ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்றிருந்தேன். அங்கு சாலையில் ஆட்டோக்கள் அதிகளவில் காணவில்லை. அதிகமான மக்கள் சைக்கிள் தான் ஓட்டினர்.
அப்போது ஒருவரிடம் கேட்டேன். அவர் அங்கு அரசு வேலையில் பெரிய அதிகாரியாக பணியில் உள்ளார். அவர் கூறியபோது, நாங்கள் இங்கு குளிர் பிரதேசத்தில் உள்ளோம். எங்களுக்கு சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியம் சூடாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது என்றார். எனவே மாணவர்கள் சைக்கிள் ஓட் டுவதால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






