என் மலர்
நீங்கள் தேடியது "ஒருவன் சிக்கினான்"
- விரட்டிச் சென்று பிடித்த உறவினர்கள்
- ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், செதுவாலையை சேர்ந்தவர் ஜாவித் ரிஸ்வான் (வயது 32). இவர் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வழிப்பறி
நேற்று இரவு வேலை முடிந்து வேலூரில் இருந்து செதுவாலை நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். மேல் மொணவூர் சர்வீஸ் சாலையில் சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் ஜாவித் ரிஸ்வானை வழிமடக்கினர்.
கத்தியை கட்டி மிரட்டி ஜாவித் ரிஸ்வானிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500 பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். ஜாவித் ரிஸ்வான் செய்வது அறியாது தவித்தபடி நின்று கொண்டு இருந்தார்.
அப்போது ஜாவித் ரிஸ்வானின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சினிமா பார்த்துவிட்டு அந்த வழியாக சென்றனர்.
ஜாவித் ரிஸ்வான் நின்று கொண்டு இருப்பதை பார்த்த அவர்கள் ஏன் இங்கு தனியாக நின்று கொண்டு இருக்கிறாய் என கேட்டனர். வாலிபர்கள் 3 பேர் செல்போன் பணத்தை பிடுங்கி சென்றதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஜாவித் ரிஸ்வானின் உறவினர்கள் வழிப்பறி வாலிபர்களை பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். கைகலப்பு ஏற்பட்டது. வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ஒருவரை மட்டும் பிடித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடத்தியதில் அவர் வேலூர், கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 22) என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.






