என் மலர்
வேலூர்
காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சென்னை ஆவடி பட்டாலியனில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை காட்பாடி வந்து செல்வது வழக்கம். ஆவடி பட்டாலியன் போலீசாருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் இன்ஸ்பெக்டருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் நேற்று முன்தினம் காட்பாடி திரும்பினார். தொடர்ந்து அவருக்கு கொரோனா உறுதியானதாக முடிவு வெளியானது. தகவலறிந்த வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் இன்ஸ்பெக்டரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வீடு உள்ள தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள பரதராமியை சேர்ந்த 32 வயதான 108 ஆம்புலன்சு டிரைவருக்கு கொரோனா உறுதியானது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோர் மனைவி உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர் 108 ஆம்புலன்சை திமிரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இதனால் அங்கு பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் 108 ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட பலரை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 400 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம், சளி எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்று முடிவுகள் வெளியாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர்:
காட்பாடி வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 28). நேற்று விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பலாற்றங் கரையோரம் உள்ள விவசாய நிலத்தின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் சுனிலை அவரது கள்ளக்காதலி வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்து ஆற்றங்கரையோரம் வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும் சுனிலின் கள்ளக்காதலி கோகிலா மாயமானார்.
டி.எஸ்.பி. துரைபாண்டியன் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். நேற்று மாலை இந்த கொலை சம்பந்தமாக ஆற்காட்டை சேர்ந்த மணிகண்டன் (28), காங்கேயநல்லூரை சேர்ந்த சதீஷ்குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மன்னார்குடியை சேர்ந்த இம்ரான் என்பவர் காட்பாடியில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவரை கோகிலா காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் கோகிலாவுக்கு சுனிலுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக சுனில் கோகிலாவின் வீட்டிற்கு வந்து சென்றார். கடந்த சில நாட்களாக சுனில் கோகிலாவை அடித்து துன்புறுத்தினார். இதனால் கோகிலா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
அவருடைய கணவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த மணிகண்டன், சதீஷ்குமார் இருவரும் சமீபத்தில் கோகிலாவை சந்தித்துள்ளனர். அப்போது சுனில் கொடுமை படுத்துவது குறித்து கோகிலா தெரிவித்துள்ளார். அவர்கள் கோகிலாவுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர்.
மேலும் சுனிலை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று சுனில் கோகிலா வீட்டிற்கு வந்தார். இதுபற்றி மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோருக்கு கோகிலா தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த இருவரும் சுனிலை கத்தியால் வெட்டினர். அவர் உயிர் பிழைக்க வீட்டுக்குள் ஓடினார். விரட்டி, விரட்டி அவரை வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலையை மறைப்பதற்காக சுனிலின் உடலை பாலாற்றங்கரையில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
கோகிலா தனது வீட்டில் தரையில் படிந்திருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
போலிசார் தலைமறைவாக உள்ள கோகிலாவை தேடி வருகின்றனர். மணிகண்டன், சதீஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஹோமியாபதி மருத்துவர் முஹமத் அத்னான். ஆம்பூர் நேதாஜி சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.
இவர் கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆம்பூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ரபீக் என்பவர் சமூக வலைதளங்களில் தகவலை பரப்பினர்.
அதில் ஹோமியோபதி மருத்துவர் கொரோனா மருந்து சம்பந்தமாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஆம்பூர் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து அதற்கான ஒப்புதலை அவர்களிடமிருந்து பெற்று, ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியில் மசூதி ஜமாஅத்திடம் அதற்கான செயல் விளக்கம் அளித்து மருந்து வழங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையறிந்த ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பிரிவித்தா ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மருத்துவர் முஹமத் அத்னான் மற்றும் ரபீக் மீது புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ரபீக் (35) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மருத்துவர் முஹமத் அத்னானைத் தேடி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜாவை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கடந்த 6-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 டாக்டர்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வந்தனர்.
வாலாஜாவை சேர்ந்த டாக்டர் லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். இதனால் அவர் வேலை செய்து வந்த லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டு சுகாதார நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் டாக்டருடன் பணியாற்றிய 6 டாக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூரில் கடந்த ஆகஸ்டு மாதம் பால் விலை உயர்வு காரணமாக டீ காபி விலை உயர்த்தப்பட்டது டீ காபி 12 க்கு விற்பனையானது.
சில ஓட்டல்களில் ரூ. 15 முதல் 16 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அனைத்து ஓட்டல் டீ கடைகள் மூடப்பட்டன. கேன்களில் சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்து வந்தனர். அவர்கள் 10 ரூபாய்க்கு டீ, காபி விற்பனை செய்தனர். இன்று ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டு மீண்டும் டீ கடைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான டீக்கடைகளில் டீ, காபி விலை குறைத்துள்ளனர். ரூ.10க்கு டீ, காபி விற்பனையானது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொணவட்டத்தை சேர்ந்த நேதாஜி மார்க்கெட் வியாபாரி மற்றும் அவரது 56 வயது மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
எலுமிச்சை வியாபாரியின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதில் அவர் கொரோனா வைரசில் இருந்து மீண்டார். கடந்த 3-ந் தேதி அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
எனினும் அவர் ஆஸ்பத்திரியிலேயே கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று இரவு திடீரென இறந்தார். அவரது உடல் கொரோனாவால் இறந்தவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில் அவரது உறவினர்கள் 10 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கொணவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
அதில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த பெண் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். அவரும் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்து விட்டார். முதுமையின் காரணமாக உயிரிழந்தாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பேர் இறந்துவிட்டனர். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
கணியம்பாடி பள்ளிகொண்டா மோட்டூர் பகுதியில் கோயம்பேட்டிலிருந்து இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுகாதார பணிகள் நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த 250 பேருக்கு ரத்தம் சளி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
காட்பாடி வஞ்சூரை சேர்ந்த கருணாகரன் மகன் சுனில் (வயது 28). விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பாலாற்றங்கரையில் உள்ள விவசாய நிலத்தில் சுனில் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.டி.எஸ்.பி துரை பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சுனில் தலை முழுவதும் கத்தியால் வெட்டிய காயங்கள் இருந்தன. அவரது மேல் சட்டை இல்லை. சம்பவ இடத்தில் ஏராளமான மது பாட்டில்கள் கிடந்தன. உடலில் அதிக வெட்டுக்காயங்கள் இருந்தாலும் அந்த இடத்தில் ரத்தக்கரை இல்லை. இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு இங்கே வீசி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் சுனில் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீடு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர். வீட்டு சுவர் முழுவதும் ரத்தக்கறைகள் இருந்தன. வீட்டின் படிக்கட்டு பின்புறம் கழிவறைக்கு செல்லும் பகுதி என அனைத்து இடங்களிலும் ரத்த கறைகள் இருந்தன.
வீட்டு தரைப்பகுதியில் ரத்தம் சிந்திய இடங்களில் தண்ணீர் ஊற்றி கழுவிய தடயங்களும் இருந்தது. இதன் மூலம் அந்த வீட்டுக்குள் வைத்து சுனிலை ஓட, ஓட வெட்டிக்கொலை செய்துவிட்டு பாலாற்று கரையில் உள்ள விவசாய நிலத்தில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த வீட்டில் கணவனை பிரிந்த இளம்பெண் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.
இளம்பெண் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விருதம்பட்டை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட சுனில் மீது 3 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதற்காக மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் இந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு அவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்து 525 பேர் வந்துள்ளனர். இதில் 5,440 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.
இவர்களில் சென்னையிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து வந்த 85 பேர் ரத்தம் சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருடன் பணியாற்றி வந்த ஆண், பெண் போலீசார் உள்பட 43 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்ஸ்பெக்டர் குணமடைந்தார். அவர் உள்பட மேலும் 2 பேர் வேலூர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். அவர்களை மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, கண்காணிப்பாளர் ராஜவேலு உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
குணமடைந்து வீடு திரும்பிய பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.






