என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூர் மாவட்டத்தில் மேலும் 250 பேருக்கு கொரோனா சோதனை

    மோட்டூர் பகுதியில் கோயம்பேட்டிலிருந்து இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த 250 பேருக்கு ரத்தம் சளி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 2 பேர் இறந்துவிட்டனர். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

    கணியம்பாடி பள்ளிகொண்டா மோட்டூர் பகுதியில் கோயம்பேட்டிலிருந்து இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுகாதார பணிகள் நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த 250 பேருக்கு ரத்தம் சளி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×