என் மலர்
செய்திகள்

வேலூரில் கொரோனாவில் இருந்து மீண்ட பெண் திடீர் மரணம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொணவட்டத்தை சேர்ந்த நேதாஜி மார்க்கெட் வியாபாரி மற்றும் அவரது 56 வயது மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
எலுமிச்சை வியாபாரியின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதில் அவர் கொரோனா வைரசில் இருந்து மீண்டார். கடந்த 3-ந் தேதி அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
எனினும் அவர் ஆஸ்பத்திரியிலேயே கண்காணிப்பில் இருந்தார். இந்த நிலையில் அந்த பெண் நேற்று இரவு திடீரென இறந்தார். அவரது உடல் கொரோனாவால் இறந்தவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில் அவரது உறவினர்கள் 10 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கொணவட்டத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
அதில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த பெண் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். அவரும் கொரோனாவில் இருந்து மீண்டார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்து விட்டார். முதுமையின் காரணமாக உயிரிழந்தாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.






