என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
காட்பாடி, திமிரியில் இன்ஸ்பெக்டர், 108 ஆம்புலன்சு டிரைவருக்கு கொரோனா
காட்பாடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர், திமிரியில் 108 ஆம்புலன்சு டிரைவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சென்னை ஆவடி பட்டாலியனில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை காட்பாடி வந்து செல்வது வழக்கம். ஆவடி பட்டாலியன் போலீசாருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் இன்ஸ்பெக்டருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் நேற்று முன்தினம் காட்பாடி திரும்பினார். தொடர்ந்து அவருக்கு கொரோனா உறுதியானதாக முடிவு வெளியானது. தகவலறிந்த வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் இன்ஸ்பெக்டரை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் வீடு உள்ள தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள பரதராமியை சேர்ந்த 32 வயதான 108 ஆம்புலன்சு டிரைவருக்கு கொரோனா உறுதியானது. அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோர் மனைவி உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர் 108 ஆம்புலன்சை திமிரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். இதனால் அங்கு பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் 108 ஆம்புலன்சில் பயணித்த நோயாளிகள் உட்பட பலரை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 400 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம், சளி எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்று முடிவுகள் வெளியாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story