என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய வாலிபர் கைது

    ஆம்பூரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் பரப்பிய வாலிபரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மருத்துவரை தேடி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த ஹோமியாபதி மருத்துவர் முஹமத் அத்னான். ஆம்பூர் நேதாஜி சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவர் கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆம்பூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ரபீக் என்பவர் சமூக வலைதளங்களில் தகவலை பரப்பினர்.

    அதில் ஹோமியோபதி மருத்துவர் கொரோனா மருந்து சம்பந்தமாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ஆம்பூர் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்து அதற்கான ஒப்புதலை அவர்களிடமிருந்து பெற்று, ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியில் மசூதி ஜமாஅத்திடம் அதற்கான செயல் விளக்கம் அளித்து மருந்து வழங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையறிந்த ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பிரிவித்தா ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மருத்துவர் முஹமத் அத்னான் மற்றும் ரபீக் மீது புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ரபீக் (35) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மருத்துவர் முஹமத் அத்னானைத் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×