என் மலர்
செய்திகள்

மூடப்பட்டுள்ள லாலாப்பேட்டை சுகாதார நிலையம்.
டாக்டருக்கு கொரோனா- லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்
வாலாஜாவை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் வேலை செய்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
வாலாஜா:
வாலாஜாவை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு கடந்த 6-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 7 டாக்டர்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வந்தனர்.
வாலாஜாவை சேர்ந்த டாக்டர் லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். இதனால் அவர் வேலை செய்து வந்த லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டு சுகாதார நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் டாக்டருடன் பணியாற்றிய 6 டாக்டர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. லாலாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






