என் மலர்
வேலூர்
டீக்கடை, ஓட்டலில் பயன்படுத்திய 20 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காட்பாடி:
காட்பாடி பகுதியில் டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று காட்பாடி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது டீக்கடை மற்றும் ஓட்டல்களில் வணிக நோக்கிலான சிலிண்டர்களை பயன்படுத்தாமல் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 20 கடைகளில் இருந்த 20 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒரே நாளில் 20 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 7 பேரிடம் ரூ.7¼ லட்சத்தை மோசடி செய்த நபர் மீது சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). இவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது நண்பர் ஒருவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சர்கள் பலரிடம் தொடர்பில் இருப்பதாக கூறி அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த நபர் எனக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முன்பணம் வேண்டும் என்றார். அதை நம்பி நான் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன்.
மேலும் அவர் உன் நண்பர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனால் எனக்கு தெரிந்த 6 பேரை அறிமுகப்படுத்தி வைத்தேன். அவர்களிடமும் தலா ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டார். எங்கள் 7 பேருக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் அவர் எங்களுக்கு வேலையும் வாங்கித் தரவில்லை, வாங்கிய ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் பணத்தையும் திருப்பித்தரவில்லை. நாங்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். பணத்தை திருப்பி கேட்டபோது அந்த நபர் சரிவர பதில் கூறவில்லை. பின்னர் தான் அவர் எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

கணியம்பாடி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்கம்பாறை:
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த கம்மவான்பேட்டை அருகே உள்ள களம்பூரான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி குணதேவி (வயது 35). இவர், கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென குணதேவி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் அருகே வயல்வெளியில் புகுந்த 9 காட்டுயானைகள் பயிர்களை நாசம் செய்ததுடன், பள்ளி சுற்றுச்சுவரையும் உடைத்தன.
குடியாத்தம்:
குடியாத்தம் வனப்பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளது. இதனால் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் அந்த யானைகள் கூட்டத்தை விரட்டி வருகின்றனர். இருப்பினும் அந்த யானைகள் கூட்டம் தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 4 யானைகள் குடியாத்தம் அருகே ரங்கசமுத்திரம் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. மறுபக்கத்தில் சுற்றுச்சுவருக்கு பதில் கம்பங்களை நட்டு அமைக்கப்பட்டிருந்த வேலியில் ஏராளமான கம்பங்களை தள்ளி விட்டு அருகிலிருந்த நெல் வயலுக்குள் புகுந்து சுமார் ½ ஏக்கர் நெற்பயிரை சேதப்படுத்தியது.
அதேபோல் விநாயகம் என்பவரது வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து குப்பகொட்டூர் பகுதியில் ரவி என்பவரது நிலத்தில் வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன், ரங்கசமுத்திரம் பகுதியில் பைப் லைன், கல் கம்பங்களை உடைத்து நாசமாக்கியது.
இதேபோல் மற்றொரு 5 யானைகள் கொண்ட கூட்டம் டி.பி.பாளையம் பகுதியில் கங்காதரன் என்பவரது கரும்பு தோட்டத்தில் புகுந்து சுமார் ½ ஏக்கர் கரும்பு பயிர்களையும், வேலு என்பவரது நிலத்தில் புகுந்து சுமார் ஒரு ஏக்கர் நெற்பயிரையும் நாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் நீலகண்டன், சுப்பிரமணி, கணேசன், வனராஜ், ஆனந்தராஜ் உள்ளிட்ட வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் பல மணி நேரம் போராடி யானை கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
2 நாட்களுக்கு முன்பு பரதராமி அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகே அருகே வந்த காட்டு யானைகள் இரவு முழுவதும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் இரவு வேளைகளில் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டேவிஸ் ராஜ்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், குமார், ரஞ்சித், கிராம நிர்வாக அலுவலர் முரளிமனோகர், ஊராட்சி செயலர் பிச்சாண்டி மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாணாவரம் பஜார் பகுதி, காந்தி சாலை, நெமிலி ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு செய்தனர்.
அப்போது முககவசம் அணியாத 9 நபர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.2,800 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரொனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
வேலூரில் கால்வாய் பணி முடிக்காமல் விட்டதற்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்து வியாபாரிகள் நூதன போராட்டம் செய்தனர். பூஜை செய்து இனிப்புகளும் வழங்கினர்.
வேலூர்:
வேலூர் மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் மண்டித்தெரு, லாங்கு பஜாரில் கடந்த 6 மாதங்களாக கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுமை பெறாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வியாரிகள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் மனஉளைச்சல் அடைந்த வியாபாரிகள், கால்வாய் பணியை முடிக்காமல் ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றதற்கு நன்றி என கூறி கிருபானந்த வாரியார் சாலை வியாபாரிகள் மற்றும் பா.ஜ.க சார்பில் மார்க்கெட் அருகே பேனர் வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.
இதில், பா.ஜ.க. மண்டல தலைவர் மோகன், வணிகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் சிவராமன், செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், பொதுச்செயலளர் எஸ்.எல்.பாபு, வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆரிப்பாஷா, பாருக் பாஷா, அஜ்மல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேனருக்கு, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். மாநகராட்சியில் செயல்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இனிப்புகள் வழங்கினர். அப்போது எதற்காக இனிப்பு வழங்குகிறார்கள் என்று கேட்ட பொதுமக்களிடம் கால்வாய் பணிகளை முடிக்காமல், மூடாமல் போட்டுள்ளனர் அதற்காக தான் இனிப்பு வழங்குகிறோம் என்றனர்.
இந்த சம்பவத்தால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் இருந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கே.வி.குப்பம் அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கும், லத்தேரி பகுதி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நேற்று காலையில் வடுகந்தாங்கல் கிராமத்தில் திருமணம் நடத்த பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், திருமண வயதை அடையாத பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவு அதிகாரி மகாலட்சுமி, சமூக நல விரிவாக்க அலுவலர் ராணி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு மணமக்களின் வயது குறித்த ஆவணங்களை சரிபார்த்தனர். அதில் மணப்பெண்ணுக்கு 18 வயது முடிய இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் திருமண வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதை விளக்கி திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த திருமணத்தை 4 மாதம் கழித்து தான் செய்ய வேண்டும் என்றும், மீறி அதற்குள் திருமணம் செய்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருமண வீட்டாரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்தை ஒட்டி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் கோனாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த கோவா பகுதியை சேர்ந்த சுமா (35) என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சதீஷ்-சுமா பணிபுரியும் நிறுவன உரிமையாளர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் சதீசிடம் ஒப்படைத்தார். சதீஷ் 4 அடுக்கு வீட்டையும் பெங்களூருவில் கட்டி வாடகைக்கு விட்டார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சுமா ஆடம்பர செலவுகளில் ஈடுபட்டுள்ளார். இதனை சதீஷ் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சுமாவின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த சதீஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருந்து தன்னுடைய மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறவினர்கள் பஞ்சாயத்து நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதிலிருந்து சுமா தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் கோனா பள்ளியில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சுமா மாயமானார். அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை கிராமம் அருகில் உள்ள ஏரியில் சுமா பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்ததும் யாதமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமாவின் உடலை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சுமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடி எழில்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 52). ஒடுகத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய தாமோதரன் திருட்டு நடந்திருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தாண்டிற்கான மாநில விருது வழங்கிட 18 வயதுக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில விருது கடந்த 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் பெண்ணிற்கு தேசிய பெண் குழந்தை தினத்தன்று (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படும். அதன்படி இந்தாண்டிற்கான மாநில விருது வழங்கிட 18 வயதுக்கு உட்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 4-வது மாடி ‘பி’ பிளாக், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூரில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொருளாளர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “பி.எஸ்.என்.எல்.நிர்வாகம் ‘4ஜி’ சேவையை உடனடியாக தொடங்கிட வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது. ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வுகால பலன்களை அமல்படுத்த வேண்டும்” என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் நிர்வாகிகள் கூறுகையில், “வருகிற 26-ந் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் கலந்து கொள்ளும். அன்றைய தினம் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 400 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்” என்றனர்.
வேலூர் வசந்தபுரம் பகுதியில் ஆட்டோ, லாரிகளில் பேட்டரிகளும், மோட்டார்சைக்கிள்களும் அதிகளவில் திருட்டு போவதாக பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
வேலூர்:
வேலூர் வசந்தபுரம் ராமசாமி முதலி தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான லாரி ஒன்றை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அந்த லாரியில் இருந்த 2 பேட்டரிகளை திருடிச் சென்றனர். காலையில் இதைப்பார்த்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்களும் மற்றும் லாரி உரிமையாளர்களும் கண்ணனுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் சென்று புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வசந்தபுரம் பகுதியில் நிறுத்தப்படும் ஆட்டோ, லாரிகளில் உள்ள பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் செல்வது தொடர் கதையாக உள்ளது. வாகனங்களை வீடுகளின் முன்பு நிறுத்துவதற்கு கூட அச்சமாக உள்ளது. இரவில் மர்மநபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் சுமார் 20 மோட்டார்சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு முன்பு மகேஷ் என்பரின் லாரியில் இருந்த பேட்டரிகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எங்கள் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கஸ்பா, வசந்தபுரம் மேம்பாலப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.