search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    வேலூரில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொருளாளர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “பி.எஸ்.என்.எல்.நிர்வாகம் ‘4ஜி’ சேவையை உடனடியாக தொடங்கிட வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது. ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வுகால பலன்களை அமல்படுத்த வேண்டும்” என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அதைத்தொடர்ந்து சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் நிர்வாகிகள் கூறுகையில், “வருகிற 26-ந் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கங்கள் கலந்து கொள்ளும். அன்றைய தினம் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுமார் 400 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்” என்றனர்.

    Next Story
    ×