என் மலர்tooltip icon

    வேலூர்

    • 2-வது நாளாக போலீசார் நடவடிக்கை
    • கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்தது.

    மேலும், விதியை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்க ப்பட்டது.

    ஆனால் விதியை மீறி பலர் பட்டாசு வெடித்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் அணைக்க ட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று முன்தினம் மொத்தம் 53 பேர் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதேபோல் நேற்று 2-வது நாளாக விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • இருதரப்பினர் இடையே ‌‌‌‌‌‌‌‌‌மோதல் ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள்.

    இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடல் முழுவதும் சகதியானது
    • தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை தோட்டப்பாளையம் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்லும் கானாறு உள்ளது.

    தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி சர்ச் எதிரே செல்லும் கானாற்று கால்வாயில் தடுப்பு சுவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது.

    கானாற்றின் தடுப்பு சுவர் உடைந்து விழுந்ததால் அந்த வழியாக இரவு நேரங்களில் பைக் ஆட்டோக்களில் செல்பவர்கள் தவறி கானாற்றில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.

    நேற்று இரவு அந்த வழியாக சென்ற தொழிலாளி பைக்குடன் கானாற்றில் விழுந்து காயமடைந்தார். மேலும் அவரது உடல் முழுவதும் சகதியானது. இதனைக் கண்ட அப்பகுதி வாலிபர்கள் கானாற்றில் விழுந்த நபரை வெளியே தூக்கி காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் ஒட்டி வந்த பைக்கின் முன் பகுதி சேதம் அடைந்தது. கானாற்றில் தடுப்பு சுவர் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை
    • தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழக அரசு அறிவுறுத்தல் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து பண்டிகையை உற்சா கத்துடன் கொண்டாடினர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்துகளை தடுக்க வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் 24 மணி நேரம் வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, தீயணைப்பு வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டத்தில் 7 மாவட்டங்களில் இருந்து 24 அழைப்புகள் வந்தன.

    இதில், 15 ராக்கெட் பட்டாசு, 9 பிற பட்டாசுகள் என சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன.

    பட்டாசு வெடித்ததில் 86 ஆண்கள், 84 பெண்கள், 5 குழந்தைகள் என 175 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்த சிறுமி நவிஷ்கா (4) பரிதாபமாக உயிரிழிந்தார். பெரிய அளவிலான தீ விபத்து, படுகாயம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.

    • கடைக்காரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது

    வேலூர்:

    குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு ஒருவர் தனது குடும்பத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, பைக் என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.

    பைக் பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், அந்த பைக்கை அதன் உரிமையாளர் பைக்கை தள்ளிக்கொண்டு எடுத்து சென்றுவிட்டார்.

    சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீ ரென தீப்பற்றி எரிந்த சம்ப வத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 மணி நேரம் போராடி மீட்டனர்
    • காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதிகளை சுற்றி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்த காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளது.

    இந்த காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை, முள்ளம்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. விலங்குகள் அடிக்கடி உணவுகளை தேடி விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

    இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் வனவிலங்குகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் கூட்டமாக வந்து செல்கின்றன.

    ஒடுகத்தூர் அடுத்த அத்தி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.

    வழக்கம்போல ரமேஷ் காலை நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார் அப்போது கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பன்றி குட்டிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    வனத்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த 11 காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.

    வனத்துறையினர் அருகே இருந்த காப்பு காட்டில் பன்றிகளை பத்திரமாக விட்டனர்.

    • மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர்
    • வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ 9. 3 9 கோடிக்கு மது விற்பனையானது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் உள்ளன. வேலூர் கோட்டத்தில் 115 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

    மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக இருந்தது. இதையொட்டி கடைகளில் ஹாட் மற்றும் பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

    நேற்று வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காண ப்பட்டது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ரூ.5.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4.02 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யானது. மொத்தம் ரூ.9.39 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
    • தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்

    வேலூர்:

    நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதையொட்டி, அதற் கான ஆயத்த பணிகளை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகளை எண்ணும் மையங்களை வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி, வேலூர் தாசில்தார் செந்தில் உட்பட 6 தொகுதிகளில் உள்ள அந்தந்த தாலுகா தாசில்தார்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • வேலூர் கோட்ட செயற்பொறியாளர் தகவல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக நாளை 14-ந் தேதி செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, வள்ளலார், ரங்காபுரம், சி.எம்.சி. காலனி மற்றும் காகிதப்பட்டறை, இ.பி.நகர், அலமேலுமங்காபுரம் தொரப்பாடி, இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், ஓட்டேரி, பாகாயம், சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    • 18-ந்தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடக்கிறது
    • முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சண்முகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் முருகருக்கு அபிஷேகம் மற்றும் 18-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

    வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிவில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி வருகிற 19-ந் தேதி வரை தினமும் காலை 9-30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.தேபோல் வேலூர் காமராஜர் சிலை அருகேயுள்ள பேரிசுப்பிர மணியசுவாமி கோவில், ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோவில், காங்கே யநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி மலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், காங்கேயநல்லூர் முருகன் கோவில்.

    அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பி ரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில்,

    கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    • 14 பவுன் நகை, ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் டேனியல் சுதாகர் (வயது52). சி.எம்.சியில் அட்டென்டராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி கிருபை ரத்தினம் (45), ராணிப்பேட்டை சி.எம்.சியில் நர்சாக பணியாற்று கிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அனை வரும் பணிக்கு சென்றனர். பணி முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் அந்தவழியாக வருவதும், மீண்டும் இரவு 7.30 மணிக்கு திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த நபரை சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த சிவா (எ) சிவகுமார் (20) என்பதும், டேனியல் சுதாகர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

    பின்னர் அவரிடம் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன. பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வேலூர் கோட்டை அகழியில் பிணம் வீச்சு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பெத்த சாரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது35) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் பழைய குற்றவாளியாகவும், போலீஸ் இன்பார்மராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஜீத், மாரிமுத்துவை போலீசில் காட்டி கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டா ளிகளுடன் சேர்ந்து சிரஞ் சீவியை கொலை செய்து வேலூர் கோட்டை அகழியில் வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த வழக்கில் 3 பேரை தனிப் படை போலீசார் கடந்த 6-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த கொலை வழக் கில் தொடர்புடைய மிட்டாய் (எ) அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி திரிந்த சித்தூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×