என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலையில் சித்தூர் சிறுவன் கைது
- வேலூர் கோட்டை அகழியில் பிணம் வீச்சு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அடுத்த பெத்த சாரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது35) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் பழைய குற்றவாளியாகவும், போலீஸ் இன்பார்மராகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஜீத், மாரிமுத்துவை போலீசில் காட்டி கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டா ளிகளுடன் சேர்ந்து சிரஞ் சீவியை கொலை செய்து வேலூர் கோட்டை அகழியில் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் 3 பேரை தனிப் படை போலீசார் கடந்த 6-ந் தேதி கைது செய்தனர்.
இந்த கொலை வழக் கில் தொடர்புடைய மிட்டாய் (எ) அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி திரிந்த சித்தூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






