என் மலர்
வேலூர்
- 2 மாநில வனத்துறையினர் விசாரணை
- பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது.
இதனால அந்த வழியாக செல்லும் போது மக்கள் மிகவும் அச்சமடைந்தனர். பெரும்பாலானோர் அந்த வழியில் இரவு நேரத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டனர்.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த சிறுத்தையை கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி துணிகரம்
- சைபர் கிரைம் போலீசில் புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஊசூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது 32). இவரை ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக நம்பிக்கை வார்த்தைகள் கூறினர்.
இதனை உண்மை என நம்பிய அமீன் அவர்கள் அனுப்பிய லிங்கில் இணைந்தார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்து 520 அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினார்.
மர்ம நபர்கள் கூறியபடி அமீன் முடித்துக் கொடுத்த வேலைக்கான பணம் அவரது வங்கி கணக்கில் வரவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது தாங்கள் கொடுக்கும் பணிகளை மீண்டும் முடித்துக் கொடுத்தால் பணம் வங்கி கணக்குக்கில் செலுத்து வதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அமீன் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த சேனூர் வீர கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது மனைவி தமிழ்ச்செல்வி.
நேற்று முன்தினம் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் தேவனாம்பட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தேவனாம்பட்டு சாலையில் வந்தபோது பைக் நிலை தடுமாறி சுரேஷ் கீழே விழுந்தார்.
இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார் அவரை சமீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் மண்டல ஆணையர் எச்சரிக்கை
- கிரிமினல் புகார்கள் பதிவு செய்ய திட்டம்
வேலூர்:
நீண்டகாலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் வி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தவறு இழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வைப்பு நிதி பங்களிப்பு தொகைகளை செலுத்தாத நிறுவனங்க ளிடம் இருந்து சட்டப்பூர்வ நிலுவை சொந்தமான அசையும், அசையா தொகையை வசூலிக்க வரும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ங்களின் ஒரு பகுதியின் கீழ் உள்ள நிறுவனங்களில் வைப்புநிதி பங்களிப்புகளை செலுத்த தவறியவர்கள் மீதான மீட்பு, சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
நிலுவை தொகையை உடனடியாக செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம், முதலாளிகளுக்கு சொத்துக்களை முடக்கவும், பற்றுகை செய்வது, விற்பனை செய்வது, பெறுநர்களை நியமிப்பது, கைது செய்து ஜெயிலில் அடைப்பது ஆகிய நடவடி க்கைகளும் எடுக்கப்படும். நீண்ட காலமாக வைப்பு நிதிகளை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் புகார்களும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் தொழிலாளர்களின் பங்கை, ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த பிறகு அதனை பி.எப். அலுவலகத்தில் செலுத்த வில்லை என்றால் குற்றவியல் சட்டம் பிரிவு 405, பிரிவு 406-ன் கீழ் குற்றத்துக்கு காரண மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது
- மது பாட்டில், பிளேடால் தாக்கிவிட்டு சென்றனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் 2 தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கார்த்தி, ராமையா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
- கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது
- பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்
வேலூர்:
தீபாவளி முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து வேலூர் மண் டலம் சார்பில், சென்னை, பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்களுக்கு வேலூர், திருப்பத்தூர், ஓசூர் மற்றும் வேலூரிலிருந்து திருச்சி, பெங்களூர் உட்பட பல ஊர்களுக்கு மொத்தம் 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இவற்றில், 4 நாட்களில் 45 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். இதுதவிர, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, நகர மற்றும் புறநகர் பஸ்கள் என வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது.
அதேநேரம், தீபாவளி முடிந்து மக்கள் ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதி களுக்கு இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் பஸ் நிலையங்களில் அதிகமானோர் குவிந்தனர். பஸ்களிலும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.
- மது பிரியர்கள் மகிழ்ச்சி
- மெஷின் கையாளுவது குறித்து ஊழியர்களுக்கு விளக்கம்
வேலூர்:
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஸ்வைப்பிங் மெஷின்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை பொறுத்த வரை, வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக் கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட மும் உள்ளன.
இதில், வேலூர் கோட்டத்தில் வேலூர்-68, திருப்பத்தூர்-37 என மொத்தம் 105 மதுக்க டைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 83 மதுக்கடைகளும் உள்ளன.
இவற்றுக்கு தேவையான ஸ்வைப்பிங் மெஷின்க ளில் முதல் கட்டமாக 50 மெஷின்கள் வந்துள்ளது. அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப் பட்டு, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகளின் விற்பனையா ளர்களிடம், ஒப்படைக் கப்பட்டன.
சில நேரங்களில் பணம் கையில் எடுத்து வர முடியாத சூழ்நிலை உள்ளது.
இதனால் அவர்கள் ஏடிஎம் அல்லது மற்றவர்களுக்கு ஜிபே, போன் பே மூலம் பணத்தை வாங்கும் நிலை ஏற்பட்டு வந்தது.
தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு ஸ்வைப்பிங் மெஷின் வர உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ஸ்வைப்பிங் மெஷின் கையாளுவது எப்படி என்பது குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவரது வீட்டின் அருகே உலக்காசி சாலையில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் இன்று காலை செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதைக்கண்டு பதறிப்போன அந்தப் பகுதி பொதுமக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வராஜ் உடலில் தலை தொங்கியபடி இருந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று செல்வராஜ் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அடிதடி உண்டானது. இந்த தகராறு காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செல்வராஜுக்கு வேறு ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாகன ஓட்டிகள் சிரமம்
- சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு முதல் குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை முதல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிபொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன.
சேரும் சகதியுமான சாலைகள்
காட்பாடி பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், வேலூர் வேலப்பாடி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் தற்போது மழையின் காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்த கூட செல்ல முடியாத அளவு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.
பணிகள் முடிவடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணையக் குழு சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட நூலக அலுவலரிடம் புத்தக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உள்ள மாணவர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் பழனி, மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலக கண்கா ணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
குடியாத்தம் வீரிசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மலர் (வயது 48).
தீபாவளி பண்டிகையை யொட்டி கே.வி.குப்பத்தை அடுத்த வடு கன்குட்டை கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அதிரசம், முறுக்கு, எள்வடை உள்ளிட்ட பலகாரங்களை கொடுப்பதற் காக நேற்று முன்தினம் மொபட்டில் கோவிந்தசாமி, மலர் ஆகியோர் சென்றனர்.
சென்னங்குப்பம் அருகே உள்ள ஆலம ரம் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து நாய் மீது மோதாமல் இருப்ப தற்காக கோவிந்தசாமி உடனடியாக பிரேக் பிடித்தார்.
அதனால் கட்டுப்பாட்டை இழந்து மொபட் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த கோவிந்த சாமி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மலர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏராளமானோர் தரிசனம்
- பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சாத்து மதுரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நேற்று தொடங்கியது.
கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு முதல் நாளான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபவம், மற்றும் சூரசம்ஹாசரம் நடைப்பெற உள்ளது.
கொடியேற்ற விழாவில் சாத்துமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






