என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொத்தம் 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன"

    • கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது
    • பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்

    வேலூர்:

    தீபாவளி முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து வேலூர் மண் டலம் சார்பில், சென்னை, பூந்தமல்லி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்களுக்கு வேலூர், திருப்பத்தூர், ஓசூர் மற்றும் வேலூரிலிருந்து திருச்சி, பெங்களூர் உட்பட பல ஊர்களுக்கு மொத்தம் 135 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இவற்றில், 4 நாட்களில் 45 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். இதுதவிர, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, நகர மற்றும் புறநகர் பஸ்கள் என வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 80 சிறப்பு பஸ்கள் கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப் பட்டது.

    அதேநேரம், தீபாவளி முடிந்து மக்கள் ஊர்களுக்கு திரும்பி செல்வதற்காக வேலூரில் இருந்து சென்னை, தாம்பரம், திருச்சி, ஒசூர் மற்றும் பெங்களூர் ஆகிய பகுதி களுக்கு இன்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் பஸ் நிலையங்களில் அதிகமானோர் குவிந்தனர். பஸ்களிலும் பயணிகள் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

    ×