என் மலர்
நீங்கள் தேடியது "The balance must be paid immediately"
- வேலூர் மண்டல ஆணையர் எச்சரிக்கை
- கிரிமினல் புகார்கள் பதிவு செய்ய திட்டம்
வேலூர்:
நீண்டகாலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் வி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் தவறு இழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் வைப்பு நிதி பங்களிப்பு தொகைகளை செலுத்தாத நிறுவனங்க ளிடம் இருந்து சட்டப்பூர்வ நிலுவை சொந்தமான அசையும், அசையா தொகையை வசூலிக்க வரும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஒரு சிறப்பு இயக்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வேலூர் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ங்களின் ஒரு பகுதியின் கீழ் உள்ள நிறுவனங்களில் வைப்புநிதி பங்களிப்புகளை செலுத்த தவறியவர்கள் மீதான மீட்பு, சட்ட நடவடிக்கைகளை தவிர்க்க நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.
நிலுவை தொகையை உடனடியாக செலுத்த தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம், முதலாளிகளுக்கு சொத்துக்களை முடக்கவும், பற்றுகை செய்வது, விற்பனை செய்வது, பெறுநர்களை நியமிப்பது, கைது செய்து ஜெயிலில் அடைப்பது ஆகிய நடவடி க்கைகளும் எடுக்கப்படும். நீண்ட காலமாக வைப்பு நிதிகளை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் புகார்களும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி பங்களிப்பின் தொழிலாளர்களின் பங்கை, ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த பிறகு அதனை பி.எப். அலுவலகத்தில் செலுத்த வில்லை என்றால் குற்றவியல் சட்டம் பிரிவு 405, பிரிவு 406-ன் கீழ் குற்றத்துக்கு காரண மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






