என் மலர்
வேலூர்
- செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அம்மனாங்குப்பம் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவரது வீட்டின் அருகே உலக்காசி சாலையில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் இன்று காலை செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதைக்கண்டு பதறிப்போன அந்தப் பகுதி பொதுமக்கள் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் செல்வராஜ் உடலில் தலை தொங்கியபடி இருந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வராஜை கொலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று செல்வராஜ் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மற்றொரு கும்பலுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அடிதடி உண்டானது. இந்த தகராறு காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செல்வராஜுக்கு வேறு ஏதாவது முன் விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வாகன ஓட்டிகள் சிரமம்
- சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு முதல் குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை முதல் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடுமையான பனிபொழிவு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றன.
சேரும் சகதியுமான சாலைகள்
காட்பாடி பாரதி நகர், வி.ஜி.ராவ் நகர், வேலூர் வேலப்பாடி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் சாலைகள் சீரமைக்கப்பட வில்லை. இதனால் தற்போது மழையின் காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கிக் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்த கூட செல்ல முடியாத அளவு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது.
பணிகள் முடிவடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடந்தது
வேலூர்:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணையக் குழு சார்பில் 56-வது தேசிய நூலக வார விழா இன்று தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று நூலக வார விழா மற்றும் புத்தக கண்காட்சியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட நூலக அலுவலரிடம் புத்தக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேவையான புத்தகங்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி உள்ள மாணவர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியை மேலும் அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் பழனி, மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலக கண்கா ணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூர்:
குடியாத்தம் வீரிசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மலர் (வயது 48).
தீபாவளி பண்டிகையை யொட்டி கே.வி.குப்பத்தை அடுத்த வடு கன்குட்டை கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அதிரசம், முறுக்கு, எள்வடை உள்ளிட்ட பலகாரங்களை கொடுப்பதற் காக நேற்று முன்தினம் மொபட்டில் கோவிந்தசாமி, மலர் ஆகியோர் சென்றனர்.
சென்னங்குப்பம் அருகே உள்ள ஆலம ரம் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து நாய் மீது மோதாமல் இருப்ப தற்காக கோவிந்தசாமி உடனடியாக பிரேக் பிடித்தார்.
அதனால் கட்டுப்பாட்டை இழந்து மொபட் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த கோவிந்த சாமி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்.
இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மலர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏராளமானோர் தரிசனம்
- பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், சாத்து மதுரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்ரமணிய கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நேற்று தொடங்கியது.
கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசி நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெறும் கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு முதல் நாளான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபவம், மற்றும் சூரசம்ஹாசரம் நடைப்பெற உள்ளது.
கொடியேற்ற விழாவில் சாத்துமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 2-வது நாளாக போலீசார் நடவடிக்கை
- கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது
வேலூர்:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவித்தது.
மேலும், விதியை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனை கண்காணிக்க சிறப்பு குழுவும் அமைக்க ப்பட்டது.
ஆனால் விதியை மீறி பலர் பட்டாசு வெடித்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் அணைக்க ட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி, வேலூர், குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று முன்தினம் மொத்தம் 53 பேர் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் நேற்று 2-வது நாளாக விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த அகரம் கிராமத்த சேர்ந்தவர்கள் சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோர் நண்பர்கள்.
இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோருக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் இருதரப்பி னருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை, ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
அப்போது மணிகண்டன், கமல், ராஜேஷ், ராமையா, ராஜேஷ், விக்னேஷ், கார்த்தி ஆகியோர் சேர்ந்து, சிவக்குமார், விவேக், மோகன் ஆகியோரை உடைந்த மது பாட்டில் மற்றும் பிளேடால் சரமாரியாக ஆங்காங்கே வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் முழுவதும் சகதியானது
- தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை தோட்டப்பாளையம் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்லும் கானாறு உள்ளது.
தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி சர்ச் எதிரே செல்லும் கானாற்று கால்வாயில் தடுப்பு சுவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது.
கானாற்றின் தடுப்பு சுவர் உடைந்து விழுந்ததால் அந்த வழியாக இரவு நேரங்களில் பைக் ஆட்டோக்களில் செல்பவர்கள் தவறி கானாற்றில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.
நேற்று இரவு அந்த வழியாக சென்ற தொழிலாளி பைக்குடன் கானாற்றில் விழுந்து காயமடைந்தார். மேலும் அவரது உடல் முழுவதும் சகதியானது. இதனைக் கண்ட அப்பகுதி வாலிபர்கள் கானாற்றில் விழுந்த நபரை வெளியே தூக்கி காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் ஒட்டி வந்த பைக்கின் முன் பகுதி சேதம் அடைந்தது. கானாற்றில் தடுப்பு சுவர் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை
- தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்
வேலூர்:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழக அரசு அறிவுறுத்தல் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து பண்டிகையை உற்சா கத்துடன் கொண்டாடினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விபத்துகளை தடுக்க வேலூர் தீயணைப்பு வடமேற்கு மண்டல துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அனைத்து தீயணைப்பு நிலையங்களில் 24 மணி நேரம் வீரர்கள் தயார் நிலையில் இருந்து கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, தீயணைப்பு வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாட்டத்தில் 7 மாவட்டங்களில் இருந்து 24 அழைப்புகள் வந்தன.
இதில், 15 ராக்கெட் பட்டாசு, 9 பிற பட்டாசுகள் என சிறு தீ விபத்துகள் ஏற்பட்டன.
பட்டாசு வெடித்ததில் 86 ஆண்கள், 84 பெண்கள், 5 குழந்தைகள் என 175 பேர் லேசான காயத்துடன் தப்பினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்த சிறுமி நவிஷ்கா (4) பரிதாபமாக உயிரிழிந்தார். பெரிய அளவிலான தீ விபத்து, படுகாயம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் பெரும் நிம்மதியடைந்தனர்.
- கடைக்காரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது
வேலூர்:
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு ஒருவர் தனது குடும்பத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக் என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே பைக்கை நிறுத்தி விட்டு அங்கிருந்து விலகி சென்றனர்.
பைக் பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், அந்த பைக்கை அதன் உரிமையாளர் பைக்கை தள்ளிக்கொண்டு எடுத்து சென்றுவிட்டார்.
சாலையில் சென்று கொண்டிருந்த பைக் திடீ ரென தீப்பற்றி எரிந்த சம்ப வத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 மணி நேரம் போராடி மீட்டனர்
- காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் பகுதிகளை சுற்றி சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பறந்து விரிந்த காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளது.
இந்த காட்டில் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல், காட்டெருமை, முள்ளம்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. விலங்குகள் அடிக்கடி உணவுகளை தேடி விவசாய நிலங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.
இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் வனவிலங்குகள் உணவைத் தேடி விவசாய நிலங்களுக்குள் கூட்டமாக வந்து செல்கின்றன.
ஒடுகத்தூர் அடுத்த அத்தி குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
வழக்கம்போல ரமேஷ் காலை நிலத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளார் அப்போது கிணற்றிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பன்றி குட்டிகள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வனத்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் அப்பகுதிக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி கிணற்றில் போராடிக் கொண்டிருந்த 11 காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். வனத்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அருகே இருந்த காப்பு காட்டில் பன்றிகளை பத்திரமாக விட்டனர்.
- மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர்
- வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஒரே நாளில் ரூ 9. 3 9 கோடிக்கு மது விற்பனையானது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் உள்ளன. வேலூர் கோட்டத்தில் 115 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடினர். தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக இருந்தது. இதையொட்டி கடைகளில் ஹாட் மற்றும் பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று வழக்கத்தைவிட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக காண ப்பட்டது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ரூ.5.37 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.4.02 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை யானது. மொத்தம் ரூ.9.39 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.






