என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூரில் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தொடக்கம்
- 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
- 72 பேர் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள் பட 17 மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலு தவி அளித்தல், நன்ன டத்தை, கலவரத்தை கட்டுப்ப டுத்துவது, சட் டம் மற்றும் கணினியை கையாளுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலை யங்களில் பணியாற்றுவது நீதிமன்றத்தில் கைதியை ஆஜர் படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியன குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
துப்பாக்கி சுடும்
இந்த நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப் பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று தொடங்கியது.
இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2-ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு ஏகே 47, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மீதமுள்ள 2-ம் நிலை பெண் காவலர்க ளுக்கு அடுத்தடுத்து பயிற்சி வழங்கப்படும் என காவலர் பயிற்சி பள்ளி போலீசார் தெரிவித்தனர்.






