என் மலர்
நீங்கள் தேடியது "He was thrown and seriously injured"
- மாட்டு கொட்டகையில் சுவிட்ச் போட்டபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம், கீழ்மோட்டூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75) விவசாயி. இவர் சொந்தமாக மாடுகளை வளர்த்து வந்தார்.
வீட்டின் அருகிலேயே தகரத்திலான கொட்டகை அமைத்து மாடுகளை கட்டி வைத்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கு எரிய வைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ராமசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் விரைந்து வந்து ராமசாமியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






