என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் நாளை சூரசம்ஹாரம்
    X

    ஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் நாளை சூரசம்ஹாரம்

    • வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறுகிறது
    • மாலை 6 மணியளவில் தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது

    வேலூர்:

    முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.

    இதையொட்டி வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 7.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற உள்ளது.

    தொடர்ந்து முருகர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது .மாலையில் அசூரர்கள்,தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்தும் சூரபத்மன் சண்முகனடியார் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கோட்டை மைதானத்திற்கு வருகின்றனர். அங்கு முருகப்பெருமான் ஜெயந்தி நாதராக எழுந்தருளுகிறார்.

    அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன நிர்வாகிகள் செய்துள்ளனர். நாளை மறுநாள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டியொட்டி முருகப்பெருமானுக்கு தினமும் பல்வேறு அலங்கார பூஜை நடக்கிறது. இரவில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. நாளை மாலை 5 மணிக்கு மலையடி வாரத்தில் சூரஷம்கார நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவையொட்டி வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது. மாலை 6 மணியளவில் சூரஷம்ஹாரமும், அதைத்தொடர்ந்து தெய்வானை முருகன் திருமணம் நடைபெறுகிறது.

    வேலூர் பேரி சுப்பிரமணியசாமி கோவில் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவில், பாலமதி, வள்ளிமலை உள்ளிட்ட முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    Next Story
    ×