என் மலர்
நீங்கள் தேடியது "நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம்"
- ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
- தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்
வேலூர்:
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதையொட்டி, அதற் கான ஆயத்த பணிகளை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர், கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகளை எண்ணும் மையங்களை வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, மாவட்ட வருவாய் அதிகாரி மாலதி, வேலூர் தாசில்தார் செந்தில் உட்பட 6 தொகுதிகளில் உள்ள அந்தந்த தாலுகா தாசில்தார்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.






