என் மலர்
நீங்கள் தேடியது "Ganda Shashti festival started today"
- 18-ந்தேதி சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடக்கிறது
- முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சண்முகருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் முருகருக்கு அபிஷேகம் மற்றும் 18-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிவில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி வருகிற 19-ந் தேதி வரை தினமும் காலை 9-30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.தேபோல் வேலூர் காமராஜர் சிலை அருகேயுள்ள பேரிசுப்பிர மணியசுவாமி கோவில், ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில், பாலமதி குழந்தை வேலாயுத பாணி கோவில், காங்கே யநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாசகிரி மலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், காங்கேயநல்லூர் முருகன் கோவில்.
அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பி ரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில்,
கம்மவான்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது.






