என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The arm and a silver chain were recovered"

    • 14 பவுன் நகை, ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜீவா நகரைச் சேர்ந்தவர் டேனியல் சுதாகர் (வயது52). சி.எம்.சியில் அட்டென்டராக பணிபுரிகிறார்.

    இவரது மனைவி கிருபை ரத்தினம் (45), ராணிப்பேட்டை சி.எம்.சியில் நர்சாக பணியாற்று கிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு அனை வரும் பணிக்கு சென்றனர். பணி முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் அந்தவழியாக வருவதும், மீண்டும் இரவு 7.30 மணிக்கு திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அந்த நபரை சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, தொரப்பாடி சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த சிவா (எ) சிவகுமார் (20) என்பதும், டேனியல் சுதாகர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.

    பின்னர் அவரிடம் இருந்த வைர நெக்லஸ் உட்பட 14 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி செயின் மீட்கப்பட்டன. பின்னர் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    ×