என் மலர்tooltip icon

    வேலூர்

    • மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.
    • காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறக்கணிக்கிறது.

    தமிழக பாஜக மாநில செயற் குழுவின் இரண்டு நாள் கூட்டம் வேலூர், அரப்பாக்கம், ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்பட அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு பாராட்டு, இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டி தமிழக அரசு போலி விளம்பரம் தேடுவதாக இந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு செய்து பாரம்பரிய முறைகளை அரசு சீரழிப்பதாகவும் பாஜக செயற்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு திமுக அரசின் ஒத்துழையாமைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய திட்டங்களை தீட்டி இந்தியாவை தொழில் வளர்ச்சியில் முன்னெடுத்துச் செல்லும் நிலையில், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக புல்லட் ரயில் திட்டம், பாதுகாப்பு தொழில்வழித்தட திட்டம், ஜவுளி தொழிற் பூங்காக்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு ஒத்துழைப்பு வழங்காமலும், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசிற்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நற்பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டங்களை மாநில திமுக அரசு புறக்கணிக்கிறது என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்குத்தான் பலன், தங்களுக்கு தனிப்பட்ட பலன் கிடைக்காதே என்பதால் ஒத்துழைப்பு வழங்க திமுக அரசு தயங்குவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
    • சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை அருகே அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ராணுவ இசை முழக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போலீசார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து வேலூர் கோட்டை வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்‌. ரவி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பாரத நாட்டுக்காக ஆயிரக்கணக்கானோர் இந்த மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளனர். பாராத நாடு முழுவதும் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

    தமிழ் மிகவும் பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்களை போன்று பேச வேண்டும் என்பது எனது ஆசை, நிச்சயம் ஒருநாள் பேசுவேன்.

    சிப்பாய் கழகம் என குறிப்பிடுகிறார்கள் ஆனால் நான் இதை வெள்ளையர்களை விரட்ட ஏற்பட்ட புரட்சியாக கருதுகிறேன். சாதி மதத்தை கடந்து போராடியுள்ளனர்.

    இந்த மண்ணில் தான் வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர் போன்றவர்கள் சிறந்த போராட்ட வீரர்களாக இருந்துள்ளனர்.

    இவர்கள் போராடவில்லை எனில் நாம் இப்போது இருப்பது போல இருக்க முடியாது.

    சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை இன்றைய இளைஞர்கள் நினைத்து பார்க்க வேண்டும். அப்போது தான் நாடு முன்னேறும்.

    ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம்.

    வில்லியம் பெனிடிக் 1800-களில் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அதில் இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகளில் மேலோங்கி இருந்ததை அறிந்தார்கள்.

    சிப்பாய் புரட்சி சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து போராடியதாக கூறுகிறார்கள் அதை நான் ஏற்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் உயர் அதிகாரிகளை நாடி இருப்பார்கள். ஆனால் இது சுதந்திரத்துக்காக நடைபெற்றது. இது தான் நாடு முழுவதும் போராட்டமாக பரவியது.

    வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு தேசம் தழுவிய போராட்டம். புரட்சி தொடங்கிய அன்றே சுதந்திர போராட்டமாக தொடங்கியது.

    1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம்.

    நேதாஜிபடைக்கு சிப்பாய் வேண்டிய போது முதலில் ஆட்களை அனுப்பியது வேலூர்.

    75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் இந்நேரத்தில் அனைத்து சுதந்திர போராட்டக்காரர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை மட்டுமே நினைத்து பார்க்கிறோம்.

    பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் சூப்பர் நாடாக மற்ற நாடுகள் இந்தியாவை பார்க்கிறது. இதற்கு உதாரணம் தான் கொரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கியுள்ளோம்.

    பிரதமருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர் மீதான பார்வையிலேயே இந்தியா நிலை குறித்து தெரியும்.

    நமது 100-வது சுதந்திர தினத்தில் உலகை ஆளும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.

    வேலூர் ஒரு வீரபூமி, இந்திய ராணுவத்தில் உள்ள அதிகமானோர் வேலூரை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல ராஜாக்கள் ஆண்டிருந்தாலும் நாம் ஒரே குடும்பமாக இருந்தோம் ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாண்டார்கள்.

    விந்திய மலையை அடிப்படையாக வைத்து வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றும், தென்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் என்றும் இருந்தது. முன்பு மகாராஷ்டிரா உட்பட தென்பக்கம் திராவிட நாடாக இருந்தது. இது ஒரு புவியியல்.

    ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது 600 நாடுகளாக பிரிய இருந்தது. அதை ஒன்று சேர்த்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல்.

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க போகிறது என்பதை நோக்கி நகர்கிறோம். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர வேண்டும்.

    100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது நாம் வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் இதை கடைபிடிக்க வேண்டும். மற்ற விகிதாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    ஆரியம், திராவிடம் என்பது இனம் சார்ந்தது அல்ல இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.

    • ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
    • ஏராளமானோர் பங்கேற்பு

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதேபோல பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டுத் தொழுகைக்கு தடை செய்யப்பட்டிருந்தது.

    வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பண்டிகையை கொண்டாடினர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து இடங்களிலும் கூட்டுத்தொழுகை நடந்ததால் இஸ்லாமியர்கள் உற்சா கத்துடன் காணப்பட்டனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பெரிய மசூதியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஜோலார்பேட்டை, இடையம்பட்டி, கடைத்தெரு, பார்சம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புத்தாடை அணிந்து கொண்டு பெரிய மசூதியில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

    இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சிக்கு முத்தவலி சங்க தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜான்பாஷா பொருளாளர் அகமதுல்லா மற்றும் ஆஜு, பையாஸ், அக்பர் உள்ளிட்ட சுமார் 250 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக செய்து இருந்தனர்.

    • குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்
    • இரவு திடீரென பிரசவவலி

    வேலூர்:

    அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன், தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். அதையடுத்து அணைக்கட்டு பகுதியில் இருந்து 108 ஆம்புலன்சு ஒன்று அந்த கிராமத்துக்கு சென்றது.

    பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த ரோஜாவை ஆம்புலன்சில் ஏற்றி வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்து சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியில் அவருக்கு பிரசவவலி அதிகரித்தது. அதனால் வேறு வழியின்றி ரோஜாவிற்கு மருத்துவ உதவியாளர் ஜெயலட்சுமி பிரசவம் பார்த்தார்.

    ஆம்புலன்சில் வைத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
    • ஏராளமானோர் பங்கேற்பு

    வேலூர்:

    வேலூரில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    வேலூர் ஆர்.என்.பாளையம் பெரிய மசூதி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர். அதேபோல் வேலூர் டவுன் சைதாப்பேட்டை பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி மற்றும் பேரணாம்பட்டில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

    .

    • பல ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்பட்டது
    • பெண்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்திற்கு தினமும் குடியாத்தம் பழைய பஸ் நிலையில் இருந்து அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது வழியில் உள்ள கிராமத்துங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் குடியாத்தம் நகருக்கு வர இந்த டவுன் பஸ்சை பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

    அரசு டவுன் பஸ் இயக்கம்

    இந்நிலையில் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்காக இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் குடியாத்தம் அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்க வேண்டும் என அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட செயலாளருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் மூலமாக அப்பகுதி திமுக நிர்வாகிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று குடியாத்தம் அணங்காநல்லூர் இடையே டவுன் பஸ் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக வேலூர் தலைமை அலுவலக துணைப் பொது மேலாளர் வணிகம் பொன்னுப்பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர்ரவி, நகர மன்ற உறுப்பினர்கள் கே. வி.கோபாலகிருஷ்ணன், கவிதாபாபு, ம.மனோஜ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.ரஞ்சித்குமார், சூரியகலாமனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் போக்குவரத்து கழக குடியாத்தம் கிளை மேலாளர் விநாயகம் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு கொடியசைத்து குடியாத்தம் அணங்காநல்லூர் பஸ்சை தொடங்கி வைத்தார்.

    கண்ணீர் மல்க வரவேற்பு

    தொடர்ந்து டவுன் பஸ்சில் அமர்ந்து அணங்காநல்லூர் கிராமம் வரை குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயன் பயணம் செய்தார். அப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு டவுன் பஸ் கிராமப் பகுதிகளுக்குள் வந்ததை பெண்கள் கண்ணீர் மல்க வரவேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து அணங்காநல்லூர் மக்கள் சார்பில் டவுன் பஸ்சை ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லிமுருகன், துணைத்தலைவர் குமாரி கிருபானந்தம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டவுன் பஸ்ற்க்கு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்மா.
    • வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்மா (வயது 60).இவர் இன்று காலை மீராசா பேட்டையில் உள்ள தோப்பிற்கு சென்று தேங்காய் எடுக்கச் சென்றார்.

    அப்போது பைக்கில் வந்த 3 பேர் கும்பல் லலிதாம்மாவை தாக்கி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    மேலும் அங்கிருந்த விவசாய கிணற்றில் லலிதா ம்மாவை தள்ளி விட்டு சென்று விட்டனர்.

    நீச்சல் தெரிந்ததால் லலிதாம்மா கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்தார். காயமடைந்த அவரை அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று அடிக்கடி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர்.

    இதன் மூலம் அந்த பகுதியில் திருட்டு நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • நாளை சிப்பாய் புரட்சி நினைவு தினம்
    • ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். சிப்பாய் புரட்சியின் இப்போது ஏராளமானோர் உயிர் இழந்தனர். செவ்வாய் புரட்சியை நினைவு கூறும் வகையில் வேலூர் மக்கா நருக்கு சிப்பாய் புரட்சி நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சிவாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து எம்எல்ஏக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். கோட்டையில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் ஆளுநர் ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்சிசி,என்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், லெட்டர் குமரவேல் பாண்டியன், முக்கிய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். ஆளுநர் தனது பயணத்தின் போது, ​​வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    • மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும்
    • பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 13 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 71 அரசுமேல் நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கான தேர்தல் நடைப்பெற்றது.

    மேலாண்மை குழுவானது மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காகவும் . மாணவர்களின் ஒழுக்கத்தை சிறப்பான முறையில் கடைபிடிப்பதற்காகவும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்தவும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது.

    ஆசிரியர்கள் . மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்த சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் . மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் விளையாட்டு பயிற்சியும் அளிக்க வேண்டும்.

    கழிவறை வசதி , காற்றோட்டமான வகுப்பறைகள் சுற்றுப்புறசு நூய்மை , மரம் வளர்ப்பது மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் . பெற்றோர்கள் மாணவர்களினுடைய கல்வி நலனை கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.

    நமது வேலூரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையை சிறப்பான தேர்ச்சி விகிதங்களை தந்து வேலூரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று பெற்றோராளையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டு பெற்றோர்களின் குறைகளை கேட்டறிந்து பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். மேலும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணை தலைவரிகளுக்கான நியான உத்தரவுகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி. உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை என் பொறுப்பு என வாசகம்
    • மாணவர்கள் வீடுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுரை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி சார்பில் காட்பாடி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் சதீஷ்குமார், சாமுண்டீஸ்வரி, சிகாமணி, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும், தான் உபயோகிக்கும் பொருட்களை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் முழு தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    • ரூ.100-க்கு மேல் வாங்கப்படும் மருந்துகளை வீட்டிற்கு சென்று டெலிவரி
    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் ஒரு அங்கமான ஸ்ரீ சுகி பார்மாவில் மேலும் ஒரு சேவையாக மக்களை தேடி மருந்துகள் எனும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.100 மற்றும் அதற்கு மேல் வாங்கப்படும் மருந்துகளை ஆர்டர் செய்தவுடன் வீட்டிற்கு சென்று டெலிவரி செய்யப்படுகிறது.

    தேவைப்படும் மருந்துகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை தொலைபேசியிலோ அல்லது மருந்து சீட்டை வாட்ஸ் அப் செயலி மூலமாக 95001 11961 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் 2 மணி நேரத்திற்குள் மருந்துகள் டோர் டெலிவரி செய்யப்படும்.

    மேலும் ஆர்டர் செய்யும் அழகு சாதன பொருட்களுக்கு 5 சதவீதம் மற்றும் மருந்துகளுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை கார்த்திகேயன் எம் எல் ஏ ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவ கல்வி நிறுவனங்களின் இயக்குனர் பேராசிரியர் என் பாலாஜி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த சேவை வேலூர், ஆரணி, குடியாத்தம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்தது
    • போட்டோ மாற்றம், செல்போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகள் நடந்தது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கார்டு சிறப்பு முகாம் இன்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு அணைக்கட்டு, உள்ளிட்ட 6 தாலுகா அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமில் ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், குடும்ப தலைவரின் போட்டோ மாற்றம், மற்றும் செல்போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

    மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்களின் தரம் குறித்தும் புகார்கள் பெறப்பட்டது. வேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    ×