என் மலர்
வேலூர்
- அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது
- வேந்தர் விசுவநாதன் தகவல்
வேலூர்:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு வழங்கவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும் அனைவரு க்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயல்படுகிறது.
அறக்கட்டளையின் உயர்கல்வி உதவித்தொகையை பெறவிரும்பும் தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளையின் தலைவரும், விஐடி-யின் வேந்தர். கோ. விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி செல்லும் வாய்ப்பு வழங்க அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் ஆன்லைன் விண்ணப்பப்படிவம் மாணவ/மாணவிகளுக்கு எளிதாக கிடைக்கப்பெறும் வகையில் அறக்கட்டளையின் http://uhetrustindia.org/ என்ற இணையதளத்திலிருந்து 13.07.2022 முதல் 22.07.2022 வரை தங்களின் விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பப்படிவத்தை மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தில், மாணவ-மாணவிகள் படித்த பள்ளி தலைமையாசிரியரின் சான்றொப்பம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சான்றொப்பம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கல்லூரியில் சேர்ந்த ஒரு வார காலத்திற்குள் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை, அறை எண்: 215, டாக்டர். எம்ஜிஆர் ப்ளாக், விஐடி வளாகம், வேலூர்-632014, என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
உயர்கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைப்பெறும். மேலும், அவர்களின் வீட்டிற்குச் சென்று குடும்ப பொருளாதார நிலையை அறிந்த பின்னரே உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு 0416 - 2202196, 8428408872 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- அணைக்கட்டு தொகுதியில் பிரமாண்ட விழா
- தி.மு.க மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது
வேலூர்:
அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிக ளுக்கு மூன்று சக்கர சைக் கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் எம்.எல்.ஏ. இன்று வழங்குகிறார்.
நலத்திட்ட உதவிகள் இ வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க. சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி, ஏழைப் பெண்களுக்கு 150 தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிகள் 22 பேருக்கு மூன்றுசக்கர சைக் கிள், சலவைத் தொழிலாளி கள் 100 பேருக்குசலவை பெட் டிகள், நாவிதர்கள் 100 பேருக்கு சலூன்கிட், ஆட்டோ டிரை வர்கள் 22 பேருக்கு ஆட்டோ, 150 இளைஞர்களுக்கு விளை யாட்டு உபகரணங்கள், அணைக்கட்டு தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2 பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற 100 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் விகள் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு வேலூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தாங்குகிறார்.
வேலூர் மாவட்ட ஊராட்சி - தலைவர் மு.பாபு வரவேற்கிறார். வேலூர், ஒன்றிய செய லாளர் சி.எல்.ஞானசேகரன், அணைக்கட்டு மத்திய ஒன் றிய செயலாளர் பி.வெங்கடே சன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமாரபாண்டியன், கணியம்பாடி ஒன்றிய செய லாளர் என்.கஜேந்திரன், பகுதி செயலாளர்கள் சி.எம். தங்கதுரை, ஆர்.கே.அய்யப் பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சரு மான துரைமுருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றார்.
இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை நலத்திட்ட வழங்கி பேருரை ஆற்றுகிறார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. சிறப்புரையாற்றுகிறார். விழாவில் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., வேலூர் மாந கர செயலாளர் ப. கார்த்திகே யன் எம்.எல்.ஏ., வி.அமலு விஜயன் எம்.எல்.ஏ., வேலூர் மேயர் மாநகராட்சி ஏ.சுஜாதா உள்பட மாவட்ட, பகுதி, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், உள் ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
முடிவில் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் என்.பிரகாஷ் நன்றி கூறு கிறார்.நலத்திட்ட உதவிகள் வழங்க வருகைதரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.. எல்.ஏ.வை வரவேற்க ஒன்றிய, பகுதி, மாவட்ட, ரு பேரூர், கிளை கழக நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொள்ளு மாறு வேலூர் மாவட்ட தி. மு.க., செயலாளர் ஏ.பி.நந்தகு ர மார் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார்.
- வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.
- சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் இல்லையென்றால் திட்டத்தை செயல்படுத்த இயலாது.
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது. இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடத்தப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் வேலூர் வள்ளலாரில் நேற்று நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் பா.கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், சிறப்பு பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்டத் தலைவர்கள் மனோகரன் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பங்கேற்று பேசினார். இதில் வேலூர் பாராளுமன்ற தேர்தலின்போது எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், கட்சியை பலப்படுத்துதல், அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-
2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க.வை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு சில இடங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் இல்லையென்றால் திட்டத்தை செயல்படுத்த இயலாது. தவிர, திட்டத்துக்கு தேவையான 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே 8 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
அதேசமயம், இதில் மக்களுக்கு பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும். தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றிட மாநில அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எலெக்ட்ரானிக்ஸ் முறையில் (ஜி.பி.எஸ்.) சுங்கம் வசூலிப்பு முறையை அமல்படுத்தப்படும்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு விமான சேவைக்கு திறக்கப்படும்.
இதேபோல், சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்தஇடம் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்பதை மாநில அரசு தெரிவித்தால் அந்த இடத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் விமான நிலையப் பணிகள் மாநில அரசின் ஆலோசனை, விதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பது தொடர்பாக தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வந்தால் அதுகுறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன
- ஆலோசனை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கதிர் ஆனந்த் எம்பி பேசியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் பல்வேறு பணிகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்ப ட்டுள்ளன. இதனை கண்காணித்து உடனடியாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாமக்கல்லில் தேர்ந்தெ டுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறித்த கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் மக்கள் பணிகளில் தேர்ந்தெ டுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பணிகளில் எந்தவித மெத்தனம் காட்டாமல் சிறந்த முறையில் செய்ய வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதியில் முதல்அமைச்சர் வந்து சென்ற சில நாட்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் ஜூப் அகற்றாமல் அதனோடு சேர்த்து சாலை அமைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதன் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.இதற்கு காரணமான அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த சாலையை போட்ட காண்ட்ராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யக்கூடாது.
ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய கலெக்டர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே பைக், ஜீப் அகற்றாமல் சாலை அமைத்துள்ளனர்.சாலை அமைத்தவர் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கிடப்பில் போடுவதால் அந்த பகுதி கவுன்சிலர் மாநகராட்சி, எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.
எனவே கடந்த 5 ஆண்டுகள் போல் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது தொகுதிக்கு உட்பட்ட வேலூர் மாநகராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மீண்டும் பள்ளம் தோண்டி குழாய்களை பதிக்க கூடாது. அந்த பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஏற்கனவே போடப்பட்ட சாலைகளை தோண்டி மீண்டும் குழாய் பதித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றார்.
கூட்டத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில்:-
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் அனைத்து பணிகளுக்கும் அ.தி.மு.க.வினர்தான் டெண்டர் எடுத்துள்ளனர்.எங்கள் ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள் இல்லை ஆகவே தான் மெத்தனமாக பணிகள் நடந்து வருகிறது.இதன் மூலம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
வேலூர் மாநகராட்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்படும் கண்கா ணிகப்பு கேமராக்களை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும். அதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய எம்.பி., எம். எல்.ஏ.க்கள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது
- தேர்தல் பணிகளில் தீவிரம்
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெறுவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல்முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடத்தப்பட்டது.இதில் மாநிலம் முழுவதும் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. சார்பில் ஆலோசனைக் கூட்டம் வேலூர் வள்ளலாரில் நேற்று நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் பா.கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், சிறப்பு பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்டத் தலைவர்கள் மனோகரன் (வேலூர்), வாசுதேவன் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் பங்கேற்று பேசினார். இதில் வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், கட்சியை பலப்படுத்துதல், அதிகப்ப டியான உறுப்பினர்களை சேர்த்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-
2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க.வை பலப்படுத்து வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு சில இடங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் இல்லையென்றால் திட்டத்தை செயல்படுத்த இயலாது. தவிர, திட்டத்துக்கு தேவையான 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே 8 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
அதேசமயம், இதில் மக்களுக்கு பிரச்னைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும். தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றிட மாநில அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் என்பதே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எலெக்ட்ரானிக்ஸ் முறையில் (ஜி.பி.எஸ்.) சுங்கம் வசூலிப்பு முறையை அமல்படுத்தப்படும்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு விமான சேவைக்கு திறக்கப்படும்.
இதேபோல், சென்னையில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்தஇடம் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்பதை மாநில அரசு தெரிவித்தால் அந்த இடத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர் விமான நிலையப் பணிகள் மாநில அரசின் ஆலோசனை, விதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைப்பது தொடர்பாக தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வந்தால் அதுகுறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கின்றனர்.
- காட்பாடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
வேலூர்:
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்ட மருத்துவர் எம்.கீர்த்தனா பேசியதாவது;-
குழந்தை திருமணத்தால், பலரின் வாழ்க்கை, பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். பெண்ணுக்கான திருமண வயது 18, ஆணுக்கான திருமண வயது 21 என்பதை அதிகாரிகள் முழங்கினாலும் அவற்றை காதில் வாங்காமல் கடமை முடிந்தது என நினைக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர்.
இளம் வயதில் திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். எனவே நாம் அனைவரும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். மருந்தாளுனர் எஸ்.தாஸ் முன்னிலை வகித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா நன்றி கூறினார்.
- சக்கரத்தில் சேலை சிக்கியதால் பரிதாபம்
- மகன் கண் முன்னே பரிதாபம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள போகலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.இவருடைய மனைவி விஜயா (வயது 55) மகன் முரளி (28) நேற்று வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு பைக்கில் புறப்பட்டு வந்தனர். விஜயா பின்னால் அமர்ந்திருந்தார்.
விரிஞ்சிபுரம் அடுத்த அண்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது விஜயாவின் சேலை எதிர்பாராத விதமாக பைக்கின் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்கியது.
இதனால் பைக் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் விஜயாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். முரளி படுகாயம் அடைந்தார்.தனது கண் முன்னே தாய் இறந்ததைக் கண்டு அவர் அழுது துடித்தார்.
இது குறித்த தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முரளியை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஜயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் பெண்கள் விழிப்புணர்வுடன் அமர வேண்டும்.புடவை மற்றும் சுடிதார் ஆகியவை பின்பக்க டயரில் சிக்கி விடாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே விபத்தை தவிர்க்க முடியும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- ரூ.9 லட்சம் மதிப்பில் வங்கப்பட்டது
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியுதவி வழங்கினர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தினம்தோறும் ஏராளமான குப்பைகள் சேருவதால் அதனை அகற்ற தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பரதராமி ஊராட்சி பொதுமக்கள் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்தை டிராக்டர் வாங்க நிதி உதவி வழங்கினர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் நிதியாக 6 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் பரதராமி ஊராட்சிக்கு டிராக்டர் வாங்கப்பட்டு தூய்மை பணி தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் பெ.கேசவேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திமகாலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ.ஜே.பத்ரிநாத் கே.ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கு டிராக்டரை அர்ப்பணித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் வேலு, ஆனந்தன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
- அமுலுவிஜயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டினார்
- நியூசிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.மூர்த்தி இவர் ஆசிய வலுதூக்கும் வீரர்.
இவரது மகன் எம்.ஜெய் மாருதி வயது 17,வேலூரில் உள்ள வி.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் ஜூலை 5 முதல் 10-ந் தேதி வரை தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட குடியாத்தம் வீரர் ஜெய் மாருதி 74 கிலோ உடல் எடை ஸ்குவாட் பிரிவில் 260 கிலோ, பெஞ்ச் பிரஸ் 122.5 கிலோ, டெட்லிப் பிரிவில் 225 கிலோ என மொத்தம் 607.5 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சாதனை படைத்த ஜெய்மாருதி வரும் டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் சப் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியாத்தத்திற்கு பெறுமை சேர்த்த ஜெய்மாருதியை அமுலுவிஜயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் சாதனை படைத்த ஜெய்மாருதியை தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் நாகராஜன், வேலூர் மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் இளமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
- 6 வாகனங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையம், சாரதி மாளிகை மற்றும் ஆற்காடு ரோடு ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது.
இது குறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை புதிய பஸ் நிலையம் செல்லியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போனது.
இது குறித்து புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அந்த நேரத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரை மடக்கி விசாரித்தனர். இதில் அவர் கலசபாக்கம் அருகே உள்ள ஆதம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 53) என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர் வேலூர் பழைய பஸ் நிலையம் சாரதி மாளிகை ஆற்காடு ரோடு மற்றும் இன்று காலை செல்லியம்மன் கோவில் ஆகிய இடங்களில் 6 பைக்குகளை திருடியது தெரிய வந்தது.
திருடிய வாகனங்க ளை வேலூர் பாலாற்றங்க ரையோரம் மறைத்து வைத்திருந்தார். அந்த 6 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் பழனியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு
- நெற்றியில் நாமம் போட்டு நூதனம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை மாட்டு வண்டிகள் மற்றும் நெற்றியில் நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மணல் குவாரிகளில் இருந்து தினசரி 800 லாரிகளில் 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது பசுமை தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு உத்தரவுகளை இதில் மதிக்கவில்லை.
மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி அட்டை வழங்க 3 மாதங்களாக சென்னை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை அனுமதி அட்டை வழங்கவில்லை. மாட்டு வண்டியில் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- சாரதி மாளிகை தரைதளம் மற்றும் முதல் மாடியில் உள்ள செல்போன் கடைகளில் மர்ம நபர் ஒருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார்.
- சாரதி மாளிகையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
வேலூர்:
வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் 255 கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாதிமாளிகை கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.
நேற்று இரவு சாரதி மாளிகை தரைதளம் மற்றும் முதல் மாடியில் உள்ள செல்போன் கடைகளில் மர்ம நபர் ஒருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார்.
அங்குள்ள 6 செல்போன் கடைகளில் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்தனர்.
இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
சாரதி மாளிகையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சிகள், உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
6 கடைகளில் மட்டுமின்றி மேலும் பல கடைகளில் கொள்ளை நடந்திருப்பதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர். அதனை போலீசார் மறுத்தனர்.
சாரதி மாளிகையில் 6 கடைகளில் மட்டும் கொள்ளை போய் உள்ளது. கொள்ளை போன பொருட்கள் மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகியுள்ளது. விரைவில் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்தனர்.






