search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness for students"

    • அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் வளர்இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் அரசு முதன்மை சுகாதார நிலையத்தில் திருமானூர் ஒன்றிய பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வளர்இளம் பருவத்தினர் நலவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் செல்வமணி தலைமை தாங்கினார். சமூக சுகாதார அலுவலர்கள் ஜோதி மற்றும் உஷா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    குறிப்பாக 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும், பாலியல் தொந்தரவில் இருந்து தாங்களை காத்துகொள்ளவேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.

    செவிலியர்கள் ஜெயந்தி, தமயந்தி ஆகியோர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருந்தாளுனர் வசந்தகுமார் நன்றி கூறினார். இதில் கீளக்கொளத்தூர், கள்ளூர், திருப்பெயர், கண்டிராதித்தம், திருமழபாடி, கீழகாவட்டாண்குறிச்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர்.

    மாணவர்களுக்கு தேனீர், பிஸ்கட், பேக், தொப்பி, சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.அனைத்து பள்ளி மாணவர்களையும் கீழகொளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியை தஞ்சைஅரசி வழிநடத்தினார்.

    • பிராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் ஏற்படுத்தப்பட்டது.
    • குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றி முழுமையாக தெரிவதில்லை.

    கோவை:

    18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

    பெரும்பாலான குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை. இதை தவிர்க்க கோவை மாவட்ட போலீசார் சார்பில் பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கான பாதுகாப்பை மையப்படுத்தி பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறான தொடுதல், பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, அது தொடர்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி சிறைக்கு சென்று வந்தால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூக வலைதளங்களை கையாளுவது உளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.

    10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் எவை? அதனால் ஏற்படும் உடல், மன ரீதியிலான மாற்றங்கள், எதிர்கால பாதிப்புகள், சமூகவலைதளங்களைக் கையாளுதல் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகளிர் நல அலுவலர், குழந்தை நல அலுவலர் என 2 பயிற்சி பெற்ற போலீசார் உள்ளனர்.

    இவர்கள் மூலம் அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 56 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.156 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போக்சோ வழக்கில் கைதானாலும் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்ட விழிப்புணர்வு மூலம் வளர்ப்பு தந்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி, நண்பரால் பாதிக்கப்பட்ட சிறுமி என 2 பேர் தைரியமாக வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு துன்புறுத்தல் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கின்றனர்.
    • காட்பாடி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

    வேலூர்:

    காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளம் பருவ திருமணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேசிய குழந்தைகள் மற்றும் சிறார் நல திட்ட மருத்துவர் எம்.கீர்த்தனா பேசியதாவது;-

    குழந்தை திருமணத்தால், பலரின் வாழ்க்கை, பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது. தமிழகத்தில், 28 சதவீதம் குழந்தை தாய்மார்கள், பிரசவகாலத்தில் உயிரை இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர். பெண்ணுக்கான திருமண வயது 18, ஆணுக்கான திருமண வயது 21 என்பதை அதிகாரிகள் முழங்கினாலும் அவற்றை காதில் வாங்காமல் கடமை முடிந்தது என நினைக்கும் பெற்றோர் இருக்கத்தான் செய்கின்றனர்.

    இளம் வயதில் திருமணங்களால், பெண்ணுக்கு கல்வி தடைபடும், தன்னம்பிக்கை குறையும், அடிக்கடி கருவுறுதல், கருக்கலைவால் சத்து பற்றாக்குறை, இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சியில்லாதது, பிரசவத்தின்போது தாய், சேய் மரணமடையும், எடை குறைவாக, ஊனமுற்று குழந்தை பிறக்கும், ரத்தசோகை, உடல், மனம் பலவீனமடையும், நோய் மற்றும் வறுமைக்கு வழிவகுக்கும். எனவே நாம் அனைவரும் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். முன்னதாக தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார். மருந்தாளுனர் எஸ்.தாஸ் முன்னிலை வகித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியை எஸ்.புவனா நன்றி கூறினார்.

    ×