என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணியம்பாடி அருகே பெண்ணிடம் நகை பறித்து கிணற்றில் தள்ளிவிட்டு சென்ற கும்பல்
- வேலூர் அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்மா.
- வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வேலூர்:
வேலூர் அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்மா (வயது 60).இவர் இன்று காலை மீராசா பேட்டையில் உள்ள தோப்பிற்கு சென்று தேங்காய் எடுக்கச் சென்றார்.
அப்போது பைக்கில் வந்த 3 பேர் கும்பல் லலிதாம்மாவை தாக்கி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க நகையை பறித்தனர்.
மேலும் அங்கிருந்த விவசாய கிணற்றில் லலிதா ம்மாவை தள்ளி விட்டு சென்று விட்டனர்.
நீச்சல் தெரிந்ததால் லலிதாம்மா கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்தார். காயமடைந்த அவரை அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அந்தப் பகுதியில் கும்பல் ஒன்று அடிக்கடி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர்.
இதன் மூலம் அந்த பகுதியில் திருட்டு நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.






