என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டையில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்
நினைவு தூணுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்துகிறார்
- நாளை சிப்பாய் புரட்சி நினைவு தினம்
- ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்
வேலூர்:
வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். சிப்பாய் புரட்சியின் இப்போது ஏராளமானோர் உயிர் இழந்தனர். செவ்வாய் புரட்சியை நினைவு கூறும் வகையில் வேலூர் மக்கா நருக்கு சிப்பாய் புரட்சி நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.
நாளை காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சிவாவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து எம்எல்ஏக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். கோட்டையில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் ஆளுநர் ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்சிசி,என்எஸ்எஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், லெட்டர் குமரவேல் பாண்டியன், முக்கிய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். ஆளுநர் தனது பயணத்தின் போது, வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நல வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார்.






